ஸ்பைடர்மேன் பார் பிரம் ஹோம் திரைப்படம் ஜூலை 4-ல் தமிழில் திரைக்கு வருகிறது.
2017-ல் வெளியான ஸ்பைடர்மேன் ஹோம் கம்மிங் படத்தின் அடுத்த பாகமாக ஸ்பைடர்மேன் பார் பிரம் ஹோம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் ஸ்பைடர்மேனாக டாம் ஹாலாந்த் நடித்துள்ளார். ஜேக் ஜில்லன்ஹால் வில்லனாக வருகிறார். ஜான் வாட்ஸ் இயக்கி உள்ளார். இந்த படம் இந்தியாவில் ஒரு நாள் முன்னதாக ரிலீசாக உள்ளது.
ஏற்கனவே அடுத்த மாதம் ஜூலை 5-ம் தேதி இந்தியாவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் படத்தின் டிரெய்லருக்கு இந்திய ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பை பார்த்து ஒருநாள் முன்னதாக 4-ம் தேதியே வெளியிடுகிறார்கள். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிடுகின்றனர்.
இந்த படத்துக்கான டிக்கெட் முன்பதிவை வருகிற 30-ம் தேதி தொடங்கி விடுவோம் என்று பட நிறுவனம் அறிவித்து உள்ளது.