புதுதில்லி, ஆக.6- மத்திய அரசின் திட்டப் பணிகளில் பணிபுரிவோரை தொழிலாளர்களாக அங்கீகரித்திட வேண்டும் என்று மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் எளமரம் கரீம் வலியுறுத்தி யுள்ளார். மாநிலங்களவையில் இது தொடர்பாக எளமரம் கரீம் பேசியதாவது: நாட்டில் மத்திய அரசின் கீழ் அங்கன்வாடி, பொதுஒப்புதல் பெற்ற சுகாதாரப் பணியாளர் (‘ஆஷா’), அனைவருக்கும் கல்வி, மதிய உணவுத் திட்டம் போன்ற பல்வேறு திட்டப் பணி களில் ஒரு கோடிக்கும் அதிக மான அளவில் தொழிலா ளர்கள் பணியாற்றி வருகிறார் கள். இவர்களில் பெரும்பாலா னவர்கள் பெண்கள்.
மிகவும் வறிய குடும்பங்களிலிருந்து வந்துள்ளவர்கள். அவர்கள், மதிப்பூதியம் என்ற பெயரில் மிகவும் அற்பத்தொகையை ஊதியமாகப் பெற்றுக்கொண்டி ருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் தொழிலாளர்களாக அங்கீக ரித்திட வேண்டும் என்று அவர் கள் நீண்டகாலமாகக் கோரி வருகிறார்கள். இந்தியத் தொழிலா ளர் மாநாட்டின் 45 ஆவது அமர்வு அவர் கள் அனைவரையும் தொழிலாளர்களாக அங்கீகரித்திட வேண்டும் என்றும், தொழிலாளர்களுக் கான குறைந்தபட்ச ஊதியம், சமூகப்பாதுகாப்பு மற்றும் இதர பயன்பாடுகளை அவர்க ளுக்கும் அளித்திட வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தது. மேலும் அத்துறைகளைத் தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்றும் கூறியிருந்தது. ஆனால், இந்தப் பரிந்துரை இதுவரையும் அமல்படுத்தப் படவில்லை என்பதைக் கூறுவ தற்கு மிகவும் வருந்துகிறேன். இந்தியத் தொழிலாளர் மாநாட் டின் 45ஆவது அமர்வு அளித் திட்ட இந்தப் பரிந்துரையை மத்தியஅரசு அமல்படுத் திட முன்வரவேண்டும். இவ்வாறு எளமரம் கரீம் கோரினார். இவரது கோரிக்கையுடன் எம். சண்முகம் (திமுக), பினாய் விஸ்வம் (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி) ஆகியோரும் தங்களை இணைத்துக்கொண்டார்கள். (ந.நி.)