tamilnadu

img

ரஜினியின் ‘தெனாலிராமன்’ அவதாரம்!

விஜயநகரத்தில், அதிக வட்டி வாங்கி ஏழைகளுக்கு இன்னல் அளித்துக் கொண்டிருந்த ஒருவர் பற்றிய தெனாலி ராமன் கதை ஒன்று உண்டு. அவரிடம் பாத்திரங்களைக் கடன் வாங்கிச் சென்ற தெனாலிராமன், திருப்பித்தரும்போது, பாத்திரங்கள் குட்டிபோட்டதாகக் கூறிச் சில சிறிய பாத்திரங்களையும் சேர்த்துக்கொடுப்பார். அதை அந்தப் பேராசைக்கார வணிகரும் வாங்கிக் கொள்வார். அடுத்தமுறை அரசரும், அவையினரும் தன் வீட்டில் விருந்துக்கு வரவிருப்பதாகக்கூறி, தங்க வெள்ளிப் பாத்திரங்களை தெனாலிராமன் கேட்பார். அவற்றைத் தரும்போதே, அவை கர்ப்பமாக இருப்பதாகவும், திருப்பித் தரும்போது குட்டிகளுடன் தருமாறும் கூறி அந்த வணிகர் கொடுப்பார். ஆனால், தெனாலிராமன் எதையும் திருப்பித் தரவே மாட்டார். நீண்ட காலம் ஆனபின் அந்த வணிகர் பாத்திரங்களைக் கேட்டபோது, அவை பிரசவத்தில் இறந்துவிட்டன என்று பதில ளிப்பார் தெனாலிராமன். பாத்திரங்கள் எப்படி இறக்கும் என்று வணிகர் கேட்க, பாத்திரங்கள் குட்டி போடலாம், இறக்காதா என்று பதிலளிப்பார் தெனாலிராமன். இந்தக் கதையைத்தான், வருமா னவரித்துறையை ஏமாற்ற ரஜினி பயன்படுத்தியிருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் 2002ஆம் ஆண்டு முதல் 2005ஆம் நிதியாண்டு வரை தாக்கல் செய்த வருமான வரிக் கணக்கு களில் குறைபாடு இருப்பதாக வருமான வரித்துறை குற்றம் சுமத்தியிருந்தது. இதற்காக 2002-03ஆம் ஆண்டுக்கு 6,20,235 ரூபாயும், 2003-04ஆம் ஆண்டுக்கு 5,56,326 ரூபாயும், 2004-05ஆம் ஆண்டுக்கு 54,45,875 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. தீர்ப்பாயத்தில் வரி குறைபாடு தொடர்பாக ரஜினி தரப்பு கூறியுள்ள தாகத் தெரிவிக்கப்படும் விளக்கத்தில், ‘2002-03ஆம் நிதியாண்டில் 2,63,00,000 ரூபாய் கடன் வழங்கப்பட்டது. அதில் 1,45,000 ரூபாய் வட்டி வந்தது. இதன் வரி முறையாகச் செலுத்தப்பட்டுவிட்டது. 2004-05ஆம் நிதியாண்டில் வட்டிக்கு வழங்கிய 1,71,00,000 ரூபாய் வசூலாக வில்லை. இதனால் தனக்கு 33,93,000 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகக் குறிப்பி டப்பட்டுள்ளது. அதாவது ‘சாதா’ பாத்திரங்கள் குட்டி போட்டது போல, வட்டி வந்த தாகக் கணக்குக்காட்டி செலுத்திய வரி வெறும் ரூ. ஒன்றரை லட்சம். ஆனால், தங்கப் பாத்திரங்கள் இறந்ததுபோல, வட்டி வராததாகக் கணக்குக் காட்டி, அரசை ஏமாற்றியது சுமார் ரூ.34 லட்சம். இவர்தான், அரசியலுக்கு வந்து ஊழலை ஒழிக்கப் போகிறாராம்! கேழ்வரகில் நெய் வடியுமா இல்லையா என்பது தமிழக மக்களுக்கு நன் றாகவே தெரியும்! அவர்களை ஏமாற்ற லாம் என்று கனவு காணாதீர்கள் மிஸ்டர் ரஜினி!

;