tamilnadu

img

கல்வி நிறுவன விளம்பர தூதுவராக ரஹானே நியமனம்

சென்னை, மே 11- எல்சா கல்வி நிறுவன விளம்பர தூதுவராக கிரிக்கெட் வீரர் ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். ஆங்கில அறிவை மேம்படுத்தவும், பேச்சு கலை வளர்க்கவும் சர்வதேச எல்சா கல்வி நிறுவனம்.செயல்பட்டு வருகிறது.   “இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன்  ரஹானே கடினமாக உழைத்து சிறப்பாக விளையாடி இந்த நிலையை எட்டியுள்ளார். அவரை விளம்பர தூதுவராக  நியமிப்பதில் பெருமை கொள்கிறோம் என்ற எல்சா நிறுவனத்தின் தலைவர் மணித் பரிக் கூறியுள்ளார்.

எல்சா நிறுவனத்தின் செயலி ஆங்கில மொழி கற்பவர்களுக்கு அவர்களின்ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்த உதவும்வகையில் பேச்சு அங்கீகார தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது, 3ஆம் வகுப்ப முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைத்து மாணவர்களுக்கும் பாடத்திட்டத்தை இது வழங்குகிறது.