tamilnadu

img

கொரோனா வைரஸ் மருத்துவ சிகிச்சைகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சி எம்.பிகள் நிதி ஒதுக்கீடு!

கொரோனா வைரஸ் மருத்துவ சிகிச்சைகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் நோய் மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள் அதாவது வென்ட்டிலேட்டர் மற்றும் பாதுகாப்பு கருவிகள் வாங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் (மாநிலங்களவை), பி.ஆர்.நடராஜன் (கோவை), சு.வெங்கடேசன் (மதுரை) ஆகியோர் தலா 1 கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஏற்கனவே 1 கோடியே 8 லட்சம் வழங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

;