tamilnadu

img

காஷ்மீர்: பிபிசி விளக்கம்

புதுதில்லி, ஆக. 12- ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக நிலவி வரும் நிலைமைகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் பிபிசி, கார்டியன் உள்ளிட்டவை செய்திகளை வெளியிட்டு வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை இந்திய அரசின் முடிவை எதிர்த்து காஷ்மீர் இளைஞர்கள் வீதிகளில் திரண்டு போராடி வருவதாக பிபிசி ஒரு வீடியோவை வெளியிட்டது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிபிசி ட்விட்டர் பக்கத்தில் ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது. “பிபிசி தனது இதழியலில் உறுதியாக இருக்கிறது. காஷ்மீர் பற்றி நாங்கள் தவறான செய்திகளை அளிக்கிறோம் என்ற கூற்றுகளை நாங்கள் உறுதியாக மறுக்கிறோம். காஷ்மீரின் தற்போதைய நிலவரத்தை பாகுபாடு எதுவும் இன்றியும் துல்லியமாகவும் வழங்கி வருகிறோம். மற்ற ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு இருக்கும் அதே தடைகள், வரம்புகள் எங்களுக்கும் காஷ்மீரில் இருக்கின்றன.ஆனால் காஷ்மீரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை தொடர்ந்து நாங்கள் செய்திகளாக பதிவு செய்வோம்” என்று பிபிசி விளக்கம் அளித்துள்ளது.