tamilnadu

img

தயாரிப்பாளர் லலித்குமாரிடம் வருமான வரி அதிகாரிகள் விசாரணை

சென்னை 
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த படம் பிகில். மகளிர் கால்பந்து விளையாட்டைப் போற்றும் வகையில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிட்டானது. 

இந்த பிகில் படத்திற்கு விஜய் பெற்ற சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு குறித்து ஆராய அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். இந்த ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை. ஆனால்  விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடம் வருமான வரி அதிகாரிகள் 24 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் விஜய் தற்போது நடித்து வரும் புதிய படமான ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமாரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள லலித்குமாரின் இல்லத்தில் நடந்தது. 

நடிகர் விஜய் வங்கிக்கணக்கில் லலித்குமாரிடம் இருந்து குறிப்பிட்ட தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. அந்த தொகை ‘மாஸ்டர்’ படத்துக்காகப் பெறப்பட்ட முன்பணம் என விஜய் தரப்பில் கூறப்பட்டு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனால் லலித்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது எனச் செய்திகள் வெளியாகி உள்ளன. 

;