tamilnadu

img

கிராமப்புறங்களில் பெருகும் மக்கள் ஆதரவு.... மேற்குவங்கத்தில் மீண்டு வரும் செங்கொடி

ஊழல் மற்றும் தவறான ஆட்சியின் காரணமாக மக்கள் ஆதரவை இழந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது திரிணாமுல் காங்கிரசை ஆட்சியில் தக்க வைக்க திணறி வருகிறார். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தனது அணிகளை தக்க வைக்கவும், கட்சித் தாவல் மூலம் அதிகமான ஆட்களை தன்னுடன் நிறுத்தி வைக்கவும் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்து தேர்தல் வல்லுநர் பிரசாந்த் கிஷோரின் கார்ப்பரேட் நிறுவனத்தை மம்தா பானர்ஜி அமர்த்தியுள்ளார்.

அதே நேரத்தில், மக்களின் தேவைகளுக்காக தொடர்ச்சியான போராட்டங்கள் மூலமாகவும், எந்தவொரு துன்பத்திற்கும் முகங்கொடுக்கும் சிபிஎம் மற்றும் இடது முன்னணியின் வளர்ந்து வரும் மக்கள் ஆதரவை கோவிட்காலத்தில் வங்காளம் முழுவதும், குறிப்பாக கிராமப்புறங்களில் தெளிவாக காண முடிகிறது. சிபிஎம் மீண்டும் வங்காளத்தை ஆட்சிசெய்யும் என்று மாநிலத்திலும் தேசிய அளவிலும் செய்திகளாகி வருகின்றன. பல மாவட்டங்களில், திரிணாமுல் மற்றும் பாஜக தொண்டர்
கள் கூட்டம் கூட்டமாக சிபிஎம்-க்கு வருகிறார் கள்.

மம்தா அரசை வெறுக்கும் மக்கள்
மேற்கு வங்காளத்தின் அனைத்து பகுதிகளிலும் ஊழல் பரவலாகி உள்ளது. மம்தாவின் தவறான ஆட்சியாலும் வன்முறையாலும் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். அதோடு கோவிட்கொள்ளை நோயால் உருவாகியுள்ள துயரங்களும் சேர்ந்துள்ளன. ‘அம்பன்’ சூறாவளியில் அனைத்தையும் இழந்த லட்சக்கணக்கான மக்கள் கடும் துன்பத்தில் உள்ளனர். அரசு அவர்களின் கையறு நிலையைக் கண்டுகொள்ளவில்லை. மாறாக அவர்களுக்கான இழப்பீட்டுவிநியோகத்தில் பெரும் முறைகேடு நடந்தது.
இது தவிர மக்களைக் கொள்ளையடிக்கும் விதமாக மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம் உட்பட பல மக்கள்பிரச்சனைகளை முன்னிறுத்தி மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக சிபிஎம் தொடர்ந்து போராடுகிறது. கோவிட் காலத்திலும், கட்டுப்பாடுகள் மற்றும் தனிமனித இடைவெளியை பராமரித்து மக்கள் கோரிக்கைகளுடன் தொடர்ச்சியான போராட்டங்களை சிபிஎம்மும் இடது முன்னணியும் நடத்தி வருகின்றன. கட்சியின் மாநில செயலாளர் சூர்யகாந்த மிஸ்ரா, இடது முன்னணி தலைவர் பிமன் பாசு உட்பட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். கோவிட் கொள்ளை நோயாலும் சூறாவளியாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கட்சி மாநிலம் முழுவதும் சமூக சமையலறைகளையும் நிவாரண முகாம்களையும் அமைத்துள்ளது.

மக்களிடம் சிந்தனை மாற்றம்
மாநிலத்தில் திரிணாமுல் ஆட்சிக்கு வந்த பிறகு, சிபிஎம் மற்றும் இடது முன்னணி ஓரங்கட்டப்பட்ட நந்திகிராம், ஆதிவாசி மக்களை பெரும்பான்மையாக கொண்ட வனாஞ்சல் பிரதேசம், அரம்பாக் போன்ற பல்வேறு பகுதிகளில்மக்கள் தாமாக முன்வந்து, சிபிஎம் தலைவர்களையும் ஊழியர்களையும் அழைத்து தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். மூடப்பட்ட கட்சி அலுவலகங் கள் பல, மக்களின் உதவியுடன் மீண்டும் திறக்கப்பட்டன. கோவிட் காலத்தில் கூட மக்கள் தவறாமல் அங்கு வருகிறார்கள். மம்தாவின்வன்முறை-ஊழல் ஆட்சியை விட இடது முன்னணி ஆட்சி சிறந்தது என்பதை உணர்ந்துகொள்வதும், எந்த ஆபத்தான காலகட்டத்திலும் சிபிஎம் ஊழியர்கள் மக்களுடன் இருப்பார் கள் என்பதை உணர்ந்துகொள்வதும் அவர் களது சிந்தனை மாற்றத்துக்கு காரணமாகி உள்ளது. சாதி, மத பிரிவினை அடிப்படையில் வகுப்புவாத விஷம் பாய்ச்சி மக்களைப் பிளவுபடுத்த முயன்றுவரும் பாஜகவையும் மக்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

இதனால் கலக்கம் அடைந்த மம்தாவும், பாஜகவும், அவர்களுக்கு ஒத்து ஊதும் சில ஊடகங்களும் சிபிஎம் மீண்டு வருவதைத் தடுக்கவும் அடக்கவும் முயற்சிக்கின்றன. மம்தாவுக்கு எதிராக பாஜக எவ்வளவு நகர்ந்தாலும், உண்மையான எதிரி சிபிஎம் என்பதை உணர்ந்து அவை செயல்படுகின்றன. அதன் வெளிப்பாடேமாநிலம் முழுதும் மீண்டும் சிபிஎம் ஊழியர்கள்மீது நடத்தப்படும் தாக்குதல்கள். மூன்று மாதங்களுக்குள், திரிணாமுல் வன்முறையில் நான்கு சிபிஎம் ஊழியர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். கோவிட் தொற்றுநோய் மற்றும் சூறாவளி பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கட்சி ஊழியர்கள் முன்முயற்சி எடுத்து வருவதே இந்த தாக்குதல் களுக்கு உடனடி காரணம்.

மம்தாவுக்கு அதிர்ச்சி
மற்ற மாநிலங்களில் இருந்த லட்சக்கணக் கான மக்கள் கோவிட் காரணமாக வேலை இழந்து திரும்பினர். பட்டினியால் வாடும் அந்தகுடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு கோரி நடத்தப்படும் சிபிஎம் தலைமையிலான போராட்டங்கள் மம்தா பானர்ஜியை அதிர வைத்துள்ளன. மக்களைத் தூண்டிவிட்டு,தனக்கு எதிராக கலவரங்களை உருவாக்குவதே சிபிஎம்மின் நோக்கம் என மம்தா பானர்ஜிகூறி வருகிறார்.சூறாவளி ஏராளமான உயிர்களைப் பறித்ததோடு பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியது. நிவாரண விநியோகத்தில் பெரும் மோசடி நடந்தது. திரிணாமுல் தலைவர்களும் தொண்டர்களும் போலி சான்றுகளையும், போலி பட்டியல்களையும் உருவாக்கி பணம் பறித்தனர். கோபமடைந்த மக்கள் திரிணாமுல் அலுவலகங்கள், தலைவர்களின் வீடுகள், பஞ்சாயத்து அலுவலகங்களை பல இடங்களில் தகர்த்தனர். மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே பல இடங்களில் மோதல்கள் வெடித்தன. பொதுமக்கள் சீற்றத்திற்கு பயந்து பல தலைவர் களும் தொண்டர்களும் அப்பகுதியை விட்டு வெளியேறினர். பெரும்பாலான பஞ்சாயத்துகள் திரிணாமுல் கட்டுப்பாட்டில் உள்ளன. அங்கெல்லாம் கொடிய முறையில் ஊழல் முறைகேடுகள்நடந்து வருகின்றன. எல்லை மீறிய தனது கட்சியின் ஊழலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சமாதானப்படுத்த சில தலைவர்களை மம்தா பானர்ஜி எச்சரித்திருந்தாலும், அது மக்களின் கோபத்தைத் தணிக்கவில்லை.

நந்திகிராமில் தலைகீழ் மாற்றம்
திரிணாமுல் அடக்கி ஆண்டுவந்த கிழக்கு மிட்னாபூரின் நந்திகிராம், கெஜூரி பகுதிகளிலும் மக்கள் ஆவேசத்துடன் கிளர்ந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் ஆட்சிக்கு வரஉதவிய நந்திகிராமில் அன்றைய கலவரங்களுக்கு நேர்மாறான நிலை இப்போது காணப்படுகிறது. பேரழிவில் தங்களுக்கு உதவ சிபிஎம்ஊழியர்களையே மக்கள் இப்போது நம்பியுள்ளனர். கலவரம் காரணமாக 11 ஆண்டுகளுக்கு முன்பு வெளியேற வேண்டிய நிலைஏற்பட்ட கட்சித் தலைவர்களும் ஊழியர்களும் நந்திகிராம், கெஜூரி பகுதிகளில் அன்பான வரவேற்பைப் பெற்று வருகின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் இதற்கு ஒரு தடையை உருவாக்க முயற்சிக்கிறது, ஆனால் மக்கள் அவற்றை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் எதிர் கொள்கின்றனர்.
மக்களிடம் சிதைந்து போன தனது பிம் பத்தை மீட்டெடுக்க பிரசாந்த் கிஷோரின் கார்ப்பரேட் நிறுவனத்தை மம்தா பானர்ஜி நியமித்துள்ளார். அதற்காக, மாநிலம் முழுவதும் சுற்றிக்கொண்டிருக்கும் ‘பி.கே.கும்பல்’ கடுமையான ஏமாற்றத்தை எதிர்கொள்கிறது. ஆறு மாதங்களாக மாநிலம் முழுதும் சுற்றித் திரியும் அவர்களால் சிபிஎம்மிலிருந்து ஒருவரைக்கூட பெயர்த்தெடுக்க முடியவில்லை.சிபிஎம் தலைவர்களும், செயற்பாட்டாளர் களும் காட்டும் உறுதியின் முன்பு அவர்கள் வெட்கித்தலை குனிய வேண்டியிருந்தது.

கொல்கத்தாவில் இருந்து தேசாபிமானிக்கு.....

கோபி எழுதிய கட்டுரை...  

தமிழில் சி.முருகேசன்

;