tamilnadu

வன்முறைக்கு வாய்ப்பு: உள்துறை அலறல்

புதுதில்லி, மே 22-வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறைச் சம்பவங்களுக்கு வாய்ப்பு இருப்பதாகவும், உரியப் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.வியாழனன்று நாடு முழுவதும் 856 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 45 மையங்களில் எண்ணப்படவுள்ளன. இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதாக உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கும் டிஜிபிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.இதில், சட்ட ஒழுங்கு, மற்றும் பொது அமைதியை நிலைநாட்ட வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளில் இடையூறு மற்றும் வன்முறை சம்பவங்களைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.