tamilnadu

img

கனமழை: நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை...

சென்னை:
சேலம், நாமக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில், கனமழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வடகிழக்குப் பருவமழை காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, பரவலாக, மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.சேலம், நாமக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் சனிக்கிழமையன்று (நவ. 14) கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தீபாவளியன்று திருநெல்வேலி, இராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில், ஞாயிற்றுக் கிழமை (நவ. 15), ஓரிரு இடங்களில், கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.