குஜராத்திலிருந்து வெளிவரும் பிரபல வார ஏடாகிய சித்ரலேகா கேரள இடதுசாரி அரசின் ஆரோக்கிய நடவடிக்கைகளையும், இடது சாரி அரசையும் வானளாவப் புகழ்ந்தும் வாழ்த்தி யும் எழுதியுள்ளது. இரண்டரை லட்சம் சந்தாதாரர்க ளைப் பெற்றுள்ளது இந்த ஏடு. கொரோனா தடுப்பில் கேரள அரசு பெற்றுள்ள வெற்றிகளைப் பற்றி 6 பக்கங்கள் அளவில் கவர் ஸ்டோரி வெளி யிட்டுள்ளது. ‘குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பாதி இந்தியாவும் சிவப்பு மண்டலமாக இருக்க கேரளம் மட்டும் எவ்வாறு பச்சை மண்டலமாக உள்ளது?’ என்று ஆச்சரியத்துடன் பெருமிதப்படுகிறது அந்தக் கவர் ஸ்டோரி. கேரளம் கொரோனா வைரஸை அடித்துச் சிதறச் செய்யும் கிராஃபிக்ஸ் சித்திரமும், சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜாவின் படமும் கட்டுரையில் உள்ளன.
‘கேரள அரசின் நடவடிக்கைகளை மற்ற மாநி லங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியா வின் இதர மாநிலங்களெல்லாம் கொரோனாவுக்கு அற்புதமான மருந்து வருமென்று காத்திருக்கும் போது பெரிய அறிவிப்புகள் ஆர்ப்பரிப்புகள் எதுவும் இல்லாமல், அசாத்தியமென்று கருதிய தைச் சாத்தியமாக மாற்றுகிறது கேரளம்’ என்று அந்தக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. குஜராத் மாடலும், மகாராஷ்டிரா மாடலுமெல்லாம் எதனால் தோற்றுப்போயின என்பதையும் சித்ரலேகாவின் கட்டுரை விவரிக்கிறது.
1950 முதல் குஜராத்தியிலும், மராத்தியி லுமாக இரு மொழிகளில் வாரந்தோறும் வெளிவந்து கொண்டிருக்கிறது சித்ரலேகா.
நன்றி: தேசாபிமானி
(16.5.2020) தமிழில்: தி.வ.