tamilnadu

img

கின்னஸ் சாதனை புரிந்த பழம்பெரும் தமிழ் நடிகை காலமானார்! 

பழம்பெரும் நடிகை விஜய நிர்மலா இன்று காலமானார்.

 குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் உள்பட நான்கு மொழிகளில் பல திரைப்படங்கள் நடித்தது மட்டுமின்றி தெலுங்கு மொழியில் மட்டும் 44 திரைப்படங்களை இயக்கிய பழம்பெரும் நடிகை விஜய நிர்மலா கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று காலை காலமானார். அவருக்கு வயது 73.

உலகிலேயே அதிக படங்கள் இயக்கிய பெண் இயக்குனர் இவர்தான் என்பதால் கின்னஸ் சாதனை பட்டியலிலும் இவர் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.