tamilnadu

img

வீட்டில் சூதாட்டம்....  நடிகர் ஷாம் உட்பட 13 பேர் கைது... 

சென்னை 
தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகரான ஷாம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2019-ஆம் ஆண்டு காவியம் என்ற ஹாலிவுட் தர படத்தில் நடித்தார். நடப்பாண்டில் 3 படங்களை கையிருப்பில் வைத்துள்ளார். கொரோனா காலம் காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஷாம் சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை நுங்கப்பாக்கம் வசித்து வரும் ஷாம் அவரது வீட்டை சூதாட்ட கிளப்பாக மாற்றி சீட்டுக்கட்டு சூதாட்டம் செய்துள்ளார். தகவலின் பேரில் அங்கு சோதனை நடத்திய சென்னை மாநகர காவல்துறை ஷாம், இயக்குனர்கள், தொழிலதிபர்கள்  உட்பட 13 பேரை கைது செய்தது. 

43 வயதாகும் ஷாம் மதுரையில் பிறந்தவர். 12 பி, இயற்கை படம் மூலம் குறுகிய காலத்தில் பிரபலமானவர். இவர் காவல்துறை வேடங்களில் கச்சிதமாக நடிக்கும் திறமையுடைவர்.   

;