திருவனந்தபுரம், ஜுலை 7- வெளிநாட்டு சீட்டுகள் குறித்த நடத்தப்படும் பிரச்சரம் தவறானது என கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் கூறினார். அதில் உள்ள வாய்ப்பு கள் குறித்து சரிவர புரிதல் இல்லாத வர்களே இந்த பிரச்சாரத்தில் ஈடு பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கேஎஸ்எப்இ வெளிநாட்டு சீட்டு கள் தோல்வி அடையவில்லை. கடந்த ஆண்டு நவம்பரில் மட்டும் வரிவரு வாயாக வெளிநாட்டு சீட்டு மூலம் ரூ.50 கோடி அளவுக்கு கிடைத்தது. இதனி டையே 240க்கும் மேற்பட்ட சீட்டுகள் துவக்கப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சீட்டு பிடித்து பணம் பெற்றுள்ளனர். இப்போது துவங்கப்பட்டுள்ள சீட்டுகளின் காலவரையறை முடி யும்போது ரூ.310 கோடிக்கும் அதிக மான தொகை விற்று வரவாகிவிடும். அதன் துவக்க கட்ட நிதி மட்டுமே இப் போதுள்ள ரூ.50கோடியாகும். சீட்டு என்றால் ஒரு மாத்துக்கான சந்தா அல்ல மாறாக நிச்சயிக்கப்பட்ட காலக் கெடுவுக்கு நீளும் ஒன்றாகும். குறைந் தது இரண்டு ஆண்டுகள் சீட்டுக்கான காலவரையறையாகும். அதனால் தான் ஒவ்வொரு மாதமும் விற்று வரவு அதிரித்துக்கொண்டே இருக்கும்.
முதலில் துவக்கப்பட்ட வெளிநாட்டவர் சீட்டுகளின் காலக்கெடு 2020 இல் நிறைவு பெறும். அப்போதுதான் அவற் றின் முழுமையான விற்றுவரவு விவ ரம் கிடைக்கும். ஒவ்வொரு சீட்டு தொடங்கும்போதும் அதன் முதல் தவணைத் தொகை கிஸ்பி பத்திரமாக முதலீடு செய்யப்படுகிறது. அதோடு சீட்டு எடுத்தவர் அந்த தொகையை நிரந்தர வைப்பு நிதியாக கிஸ்பியில் சேமிக்கிறார். கிஸ்பி அதற்கான பத்தி ரத்தை முதலீட்டாளருக்கு வழங்கு கிறது. ஒவ்வொரு மாதமும் ஏலம் நடத்தி யபிறகு அடுத்த மாத்துக்கான ஏலத் தேதி அறிவிக்கப்படுவதால் அதற்குள் தவணைத் தொகையை செலுத்து வதற்கான வாய்ப்பு சேமிப்பாளருக்கு கிடைக்கிறது. இவ்வாறு ஒவ்வொருவரும் செலுத்தும் தவணை தொகை ‘பிளாட் பண்ட்” என அழைக்கப்படுகிறது. சீட்டு எடுத்தவர்களுக்கு மாதாந்திர தொகை வழங்குவதுவரை அது குறுகிய கால பத்திரமாக கிஸ்பிக்கு வழங்கப்படு கிறது. இந்த மூன்று இனங்களில் இது வரை ரூ.25 கோடி கிஸ்பிக்கு முத லீடாக கிடைத்துள்ளது. சீட்டு குறித்த பிரச்சாரத்துக்காக ஆரம்பத்தில் செலவிடப்பட்ட தொகை ஆரம்பகட்ட செலவு மட்டுமேயாகும். சீட்டு தொடங்கிய சில மாதங்களில் ரூ.50கோடி வசூலானதும் அதில் ரூ.25 கோடி கிஸ்பி பத்திரங்களாக மாறி யிருப்பதும் வெளிநாட்டு சீட்டை வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளது என தாமஸ் ஐசக் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.