மரண ஓலத்துடன் போட்டியிடும் அளவிற்கு வேலையின்மை இந்தியாவில் அதிகரித்துள் ளது. அரசு வேலை குறித்த நம்பிக்கைகள், பருவ மழை பொய்த்துப் போவது போல மாறி வரும் நிலையில், தனியார் துறை வேலை வாய்ப்புகளும் மெல்ல அழிக்கப் பட்டு வருகிறது. வெகு வேகமாக அதிகரித்து வரும் முதலா ளித்துவ நவீனமயமாக்கலும், வளர்ச்சியும், வேலை வாய்ப்பை சுருக்கி லாபத்தை அதிகரிக்க சூழ்ச்சிகள் நிறைந்த திட்டமிடல்களைச் செய்து வருகிறது. ஆட்டோ மொபைல் தொழில் என அழைக்கப்படும் கார், லாரி மற்றும் இதர வாகன உற்பத்திகளில் 17.9% சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவுக்கு காரணம் என்ன? எரிபொருள் பயன்பாட்டை எண்ணெயில் இருந்து பாட்டரிக்கு மாற்றுவதும், வாங்கும் சக்தியில் ஏற்பட்டுள்ள குறைபாடும் முக்கியமானது என விவாதிக்கப்படுகிறது. இந்த விவாதம் உண்மையெனில் அதற்கு காரணம் முதலாளித்துவ லாபவெறியும், அரசின் கொள்கைகளுமே ஆகும். முதல் தலைமுறை மக்கள் முதல் முதலாக காஸ் அடுப்பை பயன்படுத்திய போது விலையேற்றம் செய்து தாக்குவது போல், எல்லா கட்டத்திலும் முதல்தலைமுறை பயன்பாட்டாளர்களே பாதிக்கப்படுகின்றனர். முதல் தலைமுறை இளைஞர்கள் தங்களுக்கான வேலை வாய்ப்பை பெற முடியாமல் தடுமாறும் அவலம் உருவா கிறது. எல்லா காலத்திலும், சமமற்ற போட்டி உருவாக்கப் பட்டு, இளம் தலைமுறை தாக்குதலுக்கு ஆளாகிறது.
உற்பத்தியும் லாபமும் குறைகிறதா?
வாகன உற்பத்தி 17.9% குறைகிறது, ஜே.எஸ்.டபுள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் லாபம் வீழ்ச்சி அடைகிறது. வேதாந்தா 12% லாப குறைவுக்கு ஆளாகிறது. வோடோபோன் முதல் காலாண்டில் 4 ஆயிரம் கோடி அளவிற்கு நிகர நஷ்டத்தை சந்திக்கப்போகிறது. டாரிப் கட்டண மாற்றம் காரணமாக 4.3% முதல் காலாண்டில், தொலைத் தொடர்புத் துறை நஷ்டத்தை சந்திக்க இருக்கிறது - இப்படியான செய்திகளும், வேலை இழப்பு குறித்த அபாயச் சங்கும், ஆங்காங்கே ஊடகங்களில் வெளிப்படுகிறது. இந்த பாதிப்புகள் நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி மற்றும் சந்தை விரிவாக்கத்தில் ஏற்பட்டுள்ள மந்தம் காரணமாகவும், அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு உள்ள வாய்ப்புகள் காரணமாகவும் உருவானது ஆகும். உதாரணத்திற்கு தனியார் நிறுவனங்களின் லாபம் அதி கரிக்கிற போது, மேலும் முதலீடு செய்ய தூண்டுவதில்லை. மாறாக நிறுவனங்களின் இயந்திரமயமாக்கலுக்கு அரசுகள் துணை போகும் போக்கு அதிகரித்துள்ளது. உதார ணத்திற்கு தமிழகத்தில், கார் உதிரி பாக உற்பத்தி நிறுவனங்க ளான டாங்சன் சோவல் ஆலைமூடல். இந்த அணுகுமுறை வாங்கும் சக்தியில் உடனடியாக பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்ல சிறு தொழில் அல்லது உதிரிபாக உற்பத்தி தொழிற்சாலைகளில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்துவ தால் ஆலை மூடலுக்கு அடி கோலுகிறது.
இப்போது பாட்டரி மூலம் இயங்கும் கார் உற்பத்தி வளர்ச்சி குறித்த விவாதம் மேலோங்கியுள்ளது. இதன் பாதிப்பு என்ஜின் உற்பத்தியை முடக்கும். அங்குள்ள வேலை வாய்ப்பை அழிக்கும். வேலையின்மை விகிதத்தை அதிகப்படுத்தும். குறைந்த கூலிக்கான ஆட்களை திட்டமிட்டு உருவாக்கும். மற்றொருபுறம் சிறு உற்பத்தியாளர்களில் ஒரு பகுதி பாட்டரி தயாரிக்கும் தொழிலுக்கு மாறுவர். மற்றொரு பகுதியினர் நஷ்டம் காரணமாக பாதிக்கப்பட்டு உற்பத்தி முடங்கும். இதே காலத்தில், அமேசான் தனது தீபாவளி விற்ப னையை அதிகரிக்க உள்ளது. டி.வி.எஸ். மோட்டர் 7.22% உற்பத்தி உயர்வையும், ரிலையன்ஸ் ஜியோ தனது லாபத்தில் 46% உயர்வையும் இந்த முதல் காலாண்டில் அடைய முடிந்துள்ளது. இதுவும் அண்மையில் அரசின் சலுகை களால் கிடைத்த வளர்ச்சி என்றால் மிகை அல்ல. பொருளா தார அறிஞர்கள் பலரும் கூட்டுக் களவாணி முதலாளித்துவம் குறித்து விவாதித்து வருவதை இங்கு நினைவுகூர வேண்டி யுள்ளது. உலகில் வளர்ந்த நாடுகளில் இந்த அனுபவத்தை அதிக அளவில் பார்த்திருக்கிறோம். சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கமும்,அளிக்கப்பட்ட வரிச்சலுகைக் காலமும் காலாவதியாகியுள்ள நிலையில், கார்ப்பரேட் நிறுவ னங்கள் தங்கள் நிறுவனங்களின் நஷ்ட கணக்கை வாசிக்கத் துவங்கியுள்ளன.
ஆலைமூடலும் வேலைக்கான போட்டியும்
ஆலைகளில் உற்பத்தி சற்று குறைவு ஏற்பட்டு இருந்தா லும், நிறுவனங்களின் ஆராய்ச்சி துறையாக செயல்படும் ரிசர்ச் அண்ட் டெவலெப்மெண்ட் தீவிரமாக இயங்கி வரு கிறது. இத்தகைய ஆராய்ச்சி தேவைகளுக்கான ஆளெ டுப்பும் நடைபெற்று வருகிறது. இந்த ஆளெடுப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், தீவிரமாக நிறுவ னங்கள் இயங்குகின்றன என்பதை உணர முடியும். இதன் பொருள் என்னவென்றால், மிகப்பெரும் கார்ப்பரேட் நிறு வனங்கள் தனது லாபத்தில் சரிவை சந்தித்தாலும், புதிய வடிவங்களில் புதிய உற்பத்திக்கு வழிவகை செய்ய உள்ள வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முதலாளித்துவம் தன்னை தயார் செய்து கொள்வது ஆகும். அதாவது தற்போது பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்று அபாயச் சங்கு ஊதுகிற ரெனால்ட் நிசான் நிறுவனம் தனது ஆராய்ச்சி துறைக்கு புதிய பொறியாளர்களை எடுத்து வருகிறது. இது குறித்து ஜனநாயக அமைப்புகளாகச் செயல்படும் தொழிற்சங்க அமைப்புகள் கேள்வி எழுப்பினால், தொழில்நுட்பம் வளர்ச்சி பெறுகிற போது, ஸ்கில் (திறன்) போதாமல் உள்ள ‘அன்ஸ்கில்டு’ தொழிலாளர்கள் வெளி யேற்றப்படுவது தவிர்க்க முடியாது என கூறுவதை கேட்க முடியும். முதலாளித்துவ வளர்ச்சியில், ஐ.டி.ஐ படித்தவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டு, டிப்ளமோ பட்டம் பெற்றவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதும், டிப்ளமோ பட்டம் பெற்ற வர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டு, பொறியியல் பட்டம் பெற்ற வர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதும் நடைபெறுகிறது. அதாவது ஸ்கில் என்ற பெயரில் உற்பத்திப் பணியில் உயர் தொழில்நுட்பம் பயின்ற இளம் பொறியாளர்கள், மிகக் குறைவான ஊதியத்தில் வேலை வாங்கப்படும் கொடுமை யும், கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலை வழங்காமல் சுரண்டப்படு வதும், இந்த சமூக அமைப்பு உருவாக்கிய வேலையின்மை யினால் ஏற்பட்ட மிகப்பெரிய தாக்குதல் ஆகும். மேற்குறிப்பிட்ட தாக்குதலை அதிகப்படுத்தும் வகையில், ஆலை மூடல் உருவாக்கும் வேலையின்மை உள்ளது. உதா ரணத்திற்கு நோக்கியா ஆலை மூடப்பட்டதைத் தொடர்ந்து, 7 ஆலைகள் மூடப்பட்டன. சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் கொடுமை நிகழ்ந்தது. இந்த ஆலை மூடல் நிகழ்வுகள் நடந்து ஐந்து ஆண்டுகள் முடிந்தாலும், நோக்கியா கைபேசி சந்தையில் விற்பனைக்கு வராமல் இல்லை. இன்றும் நோக்கியா கைபேசி சந்தையில் கணிச மாக விற்பனை ஆகிறது. ஆனால் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்த ஐந்து ஆண்டுகளில் மாற்று வேலை கிடைத்த தொழிலாளர்கள் மிகக் குறைவு. அதேநேரம் வேலை இழந்த தொழிலாளர்கள் மூலம் ஏற்பட்ட போட்டி மிக அதிகம்.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும், கொள்கைகளும்\
ரோபோக்கள் மிக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இது 2025ஆம் ஆண்டுகளின் போது, மனித உழைப்பு சக்தியை கணிசமாக வெளியேற்றும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களைப் பலவீனப்படுத்தவும் முதலாளிக ளுக்கு இடையிலான சந்தையைக் கைப்பற்றும் போட்டியும் ரோபோ பயன்பாட்டை அதிகரித்துள்ளது. இப்போது செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களும் அதிகரித்து வரு கிறது. இதுவும் வேலை இழப்பிற்கு காரணமாகும். குறிப்பாக வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில், 20 ஆண்டுகள் பணிபுரிந்து கணிசமான சம்பளம் பெறும் நிலையை அடைந்த தொழிலாளர்களை வெளியேற்ற நிறுவனங்கள் இந்த ரோபோ மற்றும் செயற்கை நுண்ணறிவு இயந்தி ரங்களைப் பயன்படுத்துகின்றன. அண்மையில் இரு முக்கிய உதாரணங்கள் வெளி வந்துள்ளன. ஒன்று ஊதிய உயர்வு ஒப்பந்தத்தின் போது ரோபோ மூலம் ஆள்குறைப்பு குறித்தும் விவாதிப்பது. இரண்டு வேலையில் நீடிக்க வேண்டுமானால் சம்ப ளத்தைக் குறைத்துக் கொள்வது. இந்த இரண்டுமே தொழி லாளர் மீதான மிகக் கடுமையான தாக்குதல் ஆகும். மற் றொருபுறம் மத்திய பாஜக ஆட்சியாளர்கள், வேலைக்கான தேசிய தகுதி மேம்பாட்டுத் திட்டம் ( National Employability and Enhancement Mission) மூலம் 16 வயதில் இருந்து 40 வயதுவரை எந்தவித பணிப்பாதுகாப்புச் சட்டங்களும் இல்லாமல், கொத்தடிமைகளைப் போல் பணியாற்ற தள்ளப் படுகின்றனர். ஊதியம் குறைவாக பெறக்கூடிய காண்ட்ராக்ட் அல்லது பயிற்சித் தொழிலாளர்களைக் கொண்டு உற்பத்தி செய்வதும் இக்காலத்தில் அதிகரித்துள்ளது. இது ஸ்கில் குறித்து வாதிடுவோர் பின்பற்றும் சுய முரணாகும். அதாவது சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை கைவிடும் அரசுக் கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது.
அடுத்து மிக முக்கியமாக விவாதிக்க வேண்டியது மத்திய பாஜக மற்றும் அதிமுக ஆட்சியாளர்கள் நடத்திய உலக முத லீட்டாளர் மாநாடு என்ன பலன் தந்தது என்பதாகும். இப்போ தைய ஆலைமூடல் அல்லது ஆட்குறைப்பு நடவடிக்கைக ளை தடுப்பதில் மத்திய அரசின் முழக்கங்களான, ஸ்கில் இந்தியா, மேக் இன் இந்தியா ஸ்டார்ட் அப் இந்தியா போன்றவை எந்தப் பலனையும் தரவில்லை என்பதும் உண்மையாகி யுள்ளது. முழக்கங்களைக் கடந்த செயல் மிக அவசியமா னது. அதைச் செய்யாமல் ஆலை மூடலோ, உற்பத்தி குறைவோ தடுக்கப்படாது. மேற்குறிப்பிட்ட முழக்கங்களை முன்வைக்கும் மத்திய பாஜக ஆட்சி, தொழிலாளர் சட்டங்களை கார்ப்பரேட் நிறுவ னங்களுக்கு சாதகமாகத் திருத்தி வருகிறது. இந்த நாடாளு மன்ற கூட்டத் தொடரை நீட்டிப்பு செய்து, ஏற்கனவே தாக்கல் செய்த மசோதாக்களை சட்டமாக்கி வருகிறது. குறிப்பாக சாலைப்பாதுகாப்பு சட்டம், சம்பளம் குறித்த குறியீடு, தொழிற்சாலை பாதுகாப்பு குறியீடு ஆகியவை அப்பட்ட மாக நிறுவனங்களின் லாபவெறிக்கு உத்வேகம் அளிக்கும் ஏற்பாடு ஆகும். இந்தப் பின்னணியில் ஆலைகள் மூடுவதாக அல்லது உற்பத்தி குறைவதாக வரும் முதலாளித்துவ ஓலங்கள், நிறுவனங்களுக்கான பசி ஏப்பம் ஆகும்.
இத்தகைய ஆலைமூடல் மற்றும் ஆட்குறைப்பு நட வடிக்கைகளும், வேலையின்மை அதிகரிப்பும், பொதுவா கவே வாங்கும் சக்தியைக் குறைக்கிறது. அதுவே மேலும் உற்பத்தி முடக்கத்திற்கு இட்டுச் செல்கிறது. எனவே உற்பத்தி முடக்கம், வேலை இழப்பு ஆகியவை தடுக்கப்பட வேண்டும் என மத்திய மாநில அரசுகள் நினைக்குமானால், சில குறிப்பிட்ட செயல்களைச் செய்தாக வேண்டும். கூட்டுக் களவாணி முதலாளித்துவக் கொள்கைகளைக் கைவிட்டு, நலத்திட்ட நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும். ஒன்று தொழிலாளர்களுக்கான ஊதியத்தை கணிச மாக உயர்த்த வேண்டும். குறிப்பாக காண்ட்ராக்ட் மற்றும் பயிற்சித் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற நீதிமன்றத் தீர்ப்புகளை அமலாக்க வேண்டும். இரண்டு, நீம்(NEEM) போன்ற திட்டங்கள் முற்றாக நிறுத்தப்படவும், நிரந்தர வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் வேண்டும். மூன்று புதிய வடிவங்க ளில் உற்பத்தியை துவக்கும்போது, ஆலையில் உள்ள தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்வதை நிறுத்தி, அவர்க ளுக்கு போதுமான பயிற்சி அளித்து புதிய உற்பத்தியில் ஈடுபடுத்த வேண்டும். அதேபோல் தேவைக்கு ஏற்ப நவீன தொழில்நுட்ப பயிற்சி அளிக்க வேண்டும். நான்கு அரசு மற்றும் பொதுத்துறை காலிப்பணியிடங்களை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும். மேற்கண்டவற்றை செய்து முடிக்கிற போது, இன்றைய ஆலை மூடல் மற்றும் ஆட்குறைப்பு அபாயச் சங்கினை எதிர் கொள்ள முடியும்.
கட்டுரையாளர் : சிஐடியு மாநிலச் செயலாளர்