tamilnadu

img

மின்சாரக்கட்டணம் கொரோனா காலத்தில் மேலும் ஒரு இடி...

கொரோனா தொற்று துவங்கிய பின்னால் அரசு பொதுமுடக்கம் அறிவித்த காலத்திலிருந்து 120 கோடி மக்கள் வீடுகளில்முடங்கி கிடந்தார்கள். தற்போது தான் சற்று தளர்வுகள் ஏற்பட்டு மக்கள் நடமாடுகின்றனர். ஏற்கெனவே சுருங்கிய வேலைவாய்ப்பு தற்போது சற்று அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

கிராமப்புறங்களில் சற்று மாறுபட்ட சூழல் உள்ளது. ஆனாலும் வீட்டில் முடங்கிக் கிடந்தால் என்ன நிலை ஏற்படும். சமையல் எரிவாயு பயன் படுத்துவது அதிகமாகி உள்ளதால் கூடுதல் எரிவாயு செலவாகும் நிலை ஏற்பட்டு விட்டது. இதனால்கூடுதல் சிலிண்டர்கள் தேவை ஏற்பட்டது. அதேபோன்று மின்சாரம் ஒரு முக்கிய பங்கினை ஆற்றியது. கடுமையான வேனிற்காலம். வீட்டில் முடங்கிக்கிடக்கும் நிலையில் தொலைக்காட்சி, இணையம்,மின்விசிறி, குளிர்சாதனப்பெட்டி, குளிர்சாதனம் மற்றும் செல்போன் மின்ஊட்டல் என்று பலவிஷயங்கள் மின்சார செலவினை கூடுதலாக்கியது.ஒரு வீட்டில் 5 பேர் இருந்தார்கள் என்றால் குழந்தைகள் பள்ளிக்கு அல்லது கல்லூரிக்கு செல்வது.கணவர் வேலைக்குச்சென்று திரும்புவது இவை எல்லாம் கொரோனா பொது முடக்கத்தில் இல்லை.இதனால் மின்பயன்பாடு வழக்கத்திற்கு மாறாககூடுதலாகியது.வேலை இல்லை. வருமானம் இல்லை. மின்கட்டணம் எப்படி செலுத்தமுடியும் என்ற நிலை. 

மின்விநியோக கழகங்கள் கடைப்பிடிக்கும் மின்கட்டணம் வசூலிக்கும் விகிதப்பட்டியல் கொள்கையினால் ஒரு விகிதத்திலிருந்து அடுத்த விகிதத்திற்குச் செல்வது என்ற நிலை ஏற்படும்பொழுது மின்கட்டணம் அதிகமாகிவிடுகின்றது என்ற நுகர் வோர்களின் ஆதங்கம் நியாயமானது தான். கொரோனா வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பொதுமுடக்கம் ஏற்படும் என்று நினைத்துகூட நாம் பார்க்கவில்லை. அசாதாரண நிலை தான்இது. ஒப்பந்தங்கள் ஏற்படும்பொழுது நீண்டகால ஒப்பந்தம் என்றால் அதில் ஒரு ஷரத்து சேர்க்கப் பட்டு இருக்கும். நம்முடைய கட்டுப்பாட்டை விட்டுஒரு நிகழ்வு எற்படும் காலத்தில் ஒப்பந்த ஷரத்துக்களை மாற்றி அமைக்கலாம் என்றும் அந்த ஷரத்தில்உள்ளது. ஆங்கிலத்தில் Forced mazure என்கிறார்கள்.
கொரோனா காலமும் அசாதாரண காலம்தான்.நமது கட்டுப்பாட்டில் இல்லை. கொரோனா தொற்றை தடுப்பதற்கான மருந்து ஏதும் இதுவரைகண்டுபிடிக்கவில்லை. இதை கொடுக்கலாமா அல்லது அதைக்கொடுத்தால் சரியாகுமா என்றஉறுதியற்ற நிலையில் மருத்துவ உலகம் இருக்கும்போது பொது முடக்கத்தினால் தடுத்துவிட முடியும்என்று நம்பி அதைச்செய்து கொண்டிருக்கின்றோம்.மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் இந்தகொரோனா ஏற்பட்டவுடன் அனைத்து ஒப்பந்தக்காலம் கொரோனா காலத்தில் முடிவடையுமானால் அதை ஏப்ரல் மாதம் முதல் 6 மாதத்திற்குநீட்டிப்பு செய்துகொள்ள அனுமதி அளித்துள்ளது. மின்கட்டணம் நிர்ணயிப்பு கூட தமிழ்நாடு மின்துறை ஒழுங்குமுறை ஆணையம் தனது உத்தரவாகவெளிவந்தாலும் அதை ஆறு மாதத்திற்கு நிறுத்திவைக்க முடியும்.

கொரோனா காலத்திற்கு முந்திய காலத்தில் என்ன மின் கட்டணம் செலுத்தினாரோ அதை வசூலிக்க இடமுண்டு. இந்தக் கொரோனா காலத்தில் மின்சாரம் பயன்படுத்துவது 26 சதம் வரை குறைந்துள்ளது. அதனால் மின் உற்பத்தி நிலையங்கள் மின்உற்பத்தியைநிறுத்தி வைத்துள்ளது. பஞ்சாப் மாநிலத்திலும் இதே நிலை தான்.எனவே அங்கு காற்றாலை மூலம் மின்சாரம் வாங்குவதை நிறுத்திட வேண்டும் என்றுபஞ்சாப்மாநில மின்வாரியம் முடிவு செய்து காற்றாலை உற்பத்தியாளர்களுக்கு காற்றாலை மின்சாரத்தை மின் தொகுப்புடன் இணைக்கவேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது. காற்றாலை மின்சாரம் வாங்குவதற்குஉண்டான ஒப்பந்தம் மாநில வாரியம் போட்டுள் ளதை நிறுத்தி வைத்துள்ளது. அதேபோன்று குஜராத் மாநிலத்தில் உள்ள மின்வாரியம் அதானி போன்ற நிறுவனங்களுடன் போட்ட மின்சாரம் வாங்கும் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து மின்சாரத்தின் விலையை குறைக்கதிட்டமிட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள மாநில மின்சார வாரியம் 3800 மெகாவாட் மின்சாரத்தை வெளியில் இருந்துபல்வேறு தனியாரிடம் இருந்து வாங்குகின்றது. ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூ. 7 .50 அளவில்உள்ளது. அதே சமயத்தில் தமிழக மின்வாரியத்தின் அனல் மின்நிலையங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியத்தின் அனல் மின்நிலையங்களின் மின்உற்பத்தி செலவு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.3.50 முதல் ரூ.4 வரை உள்ளது. கொரோனா காலத்தில் கணக்கெடுப்பு எடுப்பதுசாத்தியமில்லை என்பதால் 4 மாதத்திற்கான மின்கட்டணத்தை எடுத்துள்ளது.இதனால் மின்கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்துவோர் சுமை அதிகமாக உள்ளதால் குரல் எழுப்புகின்றனர்.

தமிழக அரசு செய்ய வேண்டியது
 ஒன்று வெளியிலிருந்து வாங்கும் நீண்டகால ஒப்பந்தத்தின் மூலம் மின்சார ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து மின்சாரத்தின் விலையை குறைத்திடல் வேண்டும். அல்லது வெளியிலிருந்து வாங்கும்மின்சாரத்தை நிறுத்தி விட்டு நமது அனல்மின் நிலையங்கள் மூலம் மின்உற்பத்தி செய்திடுவதன் மூலம் மின் உற்பத்தி செலவு குறையும். இதனால்ஏற்படும் செலவுக்குறைப்பினை மின்நுகர்வோர் களுக்கு அளிக்கலாம்.அதில் கூடஎன்ன வருமானம்வந்துவிடும் என்று தெரிவிக்கலாம்.ஒரு நாளைக்கு 870 லட்சம் யூனிட்டுகள் மின்சாரத்தை ரூ.7.50 கொடுத்து வாங்குவதாக வைத்துக் கொள்வோம்.அதை இரண்டு மாதத்திற்கு நிறுத்தினால் 4000 கோடி ரூபாய் கிடைக்கும். அல்லது சந்தைவிலைக்கு நிர்ணயம் செய்தால் ரூ.2000 கோடி கிடைக்கும்.வீடுகளில் மின்சாரம் பயன்படுத்துவோர் மொத்த மின்உற்பத்தியில் 27 சதமாகும். இந்தசலுகையைக்கூட அனைத்து மின்நுகர்வோர் களுக்கும் அளிக்கவேண்டியதில்லை. உயர்நீதிமன்றத்தில் மின்கட்டணம் குறித்தான வழக்கு நடந்துவரும்பொழுது அதில் ஒரு கோடியே 50 லட்சம் மின்நுகர்வோர்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதில் 25 லட்சம் மின்நுகர்வோர்கள் 9 சதவீத மின் சாரத்தை பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள்.வாரிய நடவடிக்கைப்படியே அவர்களிடமிருந்து மின்கட்டணத்தை வசூலிக்கலாம்.அவர்களால் அந்த மின்கட்டணத்தை அளிக்கும் தகுதி உள்ளவர்கள் .மீதம் உள்ள ஒரு கோடியே 25 லட்சம் மின்நுகர்வோர்கள் 18 சதவீத மின்சாரத்தை பயன்படுத்துபவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு இந்த சலுகையை அளிக்கலாம். இதில் தற்போது கூடுதல் ஆகி உள்ள தொகை என்பது அவ்வளவு தான் இருக்கும். கொரான கணக்கெடுப்பிற்கு முன்பு என்ன கணக்கீடு செய்யப்பட்டதோ அதை மின்வாரியம் பெற்றுக்கொள்ளலாம். இந்த நடவடிக்கையை மின்வாரியம் மட்டும்தனியாக செய்யமுடியாது. தமிழக அரசு தான் மத்திய அரசிடம் கொண்டு சென்று இதற்கான நடவடிக்கை எடுத்தால் மின்கட்டணம் செலுத்தியவர் களுக்கு வருகின்ற மாதத்தில் கட்டிய தொகையை சரிசெய்து கொள்ளமுடியும தமிழக அரசு தான்இதற்கான முடிவினை எடுக்கவேண்டும்.இதைச்செய்தால் வருமானமிழந்த மக்களின் வாழக்கையில் சற்று நிம்மதி உருவாகும்.

;