tamilnadu

img

புதுச்சேரியில் கல்லூரியை சிறைச் சாலையாக மாற்ற சிபிஎம் எதிர்ப்பு

புதுச்சேரி, ஏப். 28- கலைக் கல்லூரியை சிறைச்  சாலையாக மாற்றும் முடிவை  புதுச்சேரி அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி முதல மைச்சர் நாராயணசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் புதுச்சேரி பிரதேச செயலா ளர் ஆர்.ராஜாங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதன் விபரம் வருமாறு:

புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு அறிவியல் மற்றும்  கலைக் கல்லூரியை இடைக்கால  சிறைச்சாலையாக மாற்ற மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. அதற்  காக பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி  கட்டுமான பணிகள் ரகசியமாக நடந்து வருகிறது. மாநில அரசின்  இத்தகைய தவறான முடிவை மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.

அதிகார வர்க்கத்தினர் கல்வி யின் மாண்பை, கல்வியின் சிறப்பை சீர் குறைக்கின்ற வகை யில் கல்வி கூடத்தை சிறைச் சாலையாக மாற்றுவது என்ற முடிவு அதிர்ச்சியளிக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் தனி பல்கலைக் கழகம், நகர்புற, கிரா மப்புற ஏழை மாணவர்கள் உயர் கல்வி வாய்ப்புகள் உருவாக்க மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகள், ஜனநாயக இயக்  கங்கள் ஒன்று சேர்ந்து தொடர்ந்து  போராடின. இந்த பின்னணியில் 2001-ல்  மாணவர்களுக்கான கல்வி; வாய்ப்பு, இளைஞர்களுக் கான வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு கடுகளவே கல்வி நிறுவனங்கள் துவங்கப் பட்டன.

அதன்படி, கதிர்காமம் இந்திரா காந்தி அரசு கலைக்கல் லூரி, மதகடிப் பட்டில் காம ராஜர் கலை-அறிவியல் கல்லூரி,  வில்லியனூர் மற்றும் தவ ளக்குப்பம் மேல்நிலைப் பள்ளி யில் இணைப்பு கல்லூரிகள் துவங்கப்பட்டன. சொந்த கட்டிடம் இல்லாமல் இருந்த இந்திரா காந்தி அரசு கலைக் கல்லூரிக்கு 19 ஆண்டு கள் கடந்த நிலையில் 2018-19 ல்  தான் சொந்த கட்டிடம் கட்டி முடிக்  கப்பட்டன.  நடப்பு கல்வி யாண்டில் 1000 திற்கும் மேற்  பட்ட மாணவர்கள் பயில்கி றார்கள். குறிப்பாக பெண்கள் 50 சதவீதத்திற்கும் பயனடை கிறார்கள்.

இவ்வாறான சூழலில் கல்லூரியிலுள்ள 12 அறைகளை குற்றவாளிகள் தங்கவும், சமை யல் கூடம் அமைக்கவும் சிறைச்  சலையாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. கல்விச் சாலையை சிறையாக மாற்றுவ தால் மாணவர்கள், பெற்றோர்கள்  உளவியல் ரீதியாக பாதிக்கப்படு வார்கள்.  பொதுவாக புதுச்சேரி  மக்களின் கல்வியை இழிவு படுத்தும் இந்த நடவடிக்கையை ஏற்க மாட்டார்கள்.

கல்விச் சாலையை சிறைச்  சாலையாக மாற்றப்படுவது புதுவை மக்களின் சுயமரி யாதையை கேள்விக்கு உள் ்ளாக்கப்படுகிறது. இச்செயலை ஒரு போதும் மாநில மக்களும், மாணவர் சமூகமும் ஏற்காது.  சிறைச்சாலைகள் கல்விச் சாலை யாக மாற்றப்படலாம். ஆனால்  கல்விச் சாலை சிறைச்சாலை யாக மாற்றக் கூடாது. ஆகவே, மாநில அரசு இந்திரா காந்தி அரசு  கலை மற்றும் அறிவியல்  கல்லூ ரியை சிறைச்சாலையாக மாற்றும்  முடிவை உடனடியாக கைவிட வேண்டும். சிறைசாலைக்காக நடைபெறும் கட்டுமான பணி களை நிறுத்த வேண்டும்.

தவறான முடிவுக்கு வழி வகுத்தவர்களை மக்களுக்கு அடையாளப்படுத்த வேண்டும். அவர்கள் மீது ஒழுங்கு நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராஜாங்கம் தெரி வித்துள்ளார்.

;