இறுதிச் சடங்கு செய்த வட்டாட்சியர் தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்த குடும்பத்தினர்
போபால், ஏப்.22- மத்தியப்பிரதேசத்தில் கொரோனா தொற்றால் உயிரி ழந்தவர் உடலுக்கு இறுதிசடங்கு செய்ய குடும்பத்தினர் மறுத்துவிட் டனர். வட்டாட்சியர் முன்வந்து தக னம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலை அடுத்துள்ள சுஜல்பூ ரைச் சேர்ந்த நபர், பக்கவாதம் கார ணமாக தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்தார். ஏப். 14ஆம் தேதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அவர் சிராயு மருத்துவ மனையில் கொரோனா சிறப்புப் பிரி வுக்கு மாற்றப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஏப். 20ஆம் தேதி இறந்தார். பிணவறை யில் வைக்கப்பட்டிருந்த உடலை நகராட்சி அதிகாரிகள், மாவட்ட நிர் வாகத்திடம் ஒப்படைத்தனர். இறந்த நபரின் உடலைப் பெற குடும்ப உறுப்பினர்கள், அவரது மனைவி, மகன், மைத்துனர் போபால் வந்துள்ளனர். முழு முன்னெச்ச ரிக்கையுடன் போபாலில் உடலைத் தகனம் செய்ய வேண்டுமென அதி காரிகள் அவர்களிடம் கூறியுள்ள னர். ஆனால் உடலை வாங்க குடும்ப உறுப்பினர்கள் மறுத்துவிட்டனர்.
மருத்துவ பாதுகாப்பு உபகர ணங்களை குடும்பத்தினருக்கு அளிக்கிறோம் எனக்கூறியும் உற வினர்கள் மறுத்துவிட்டனர். இறந்த நபருக்கு சிகிச்சையளித்த மருத்து வர்கள், செவிலியர்கள் உள்பட அனைவரும் மனிதர்கள் தானே எனக் கூறியும் அவர்கள் மறுத்து விட்டனர். கொரோனாவால் உயிரி ழந்த நபருக்கு இறுதிச்சடங்கு செய்ய பைராகர் வட்டாட்சியர் குலாப் சிங் பாஹல் முன்வந்தார். குடும்ப உறுப் பினர்கள் 50 மீட்டர் தூரத்தில் நின்று கொள்ள குலாப் சிங் இறந்தவரின் உடலுக்கு தீ மூட்டினார். குலாப் சிங் பாஹலை பாராட்டிய போபால் ஆட்சியர், “உயிர்க்கொல்லி கொரோனாவுக்கு எதிராகப் போரா டுவதற்கு கொரோனா வீரர்கள் எதையும் பணயம் வைக்கத் தயா ராக உள்ளனர்” என்றார். இறந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் முடிவு கள் என்னவென்று தெரியவில்லை.