tamilnadu

img

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை:
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 5 மாவட் டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வியாழக்கிழமை  திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், தருமபுரி, திண்டுக்கல்லில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள் ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செவ்வாயன்று இரவு முதல் அடிக்கடி மழைபெய்து வருகிறது. லேசான வானமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செய்யாறு, தலைஞாயிறு, திருப்பூண்டி தலா 10 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது.தாமரைப்பாக்கம், கொலப் பாக்கத்தில் தலா 9 செ.மீ., அம்பத்தூர், வேதாரண்யம், திருத் துறைப்பூண்டியில் தலா 7 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது.மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு குமரிக்கடல், வடதமிழக  கடலோர பகுதிகளுக்கு  செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறது.

;