tamilnadu

img

6 மாவட்டங்களில்  கன மழைக்கு வாய்ப்பு

சென்னை;
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், சேலம், தருமபுரி, நாமக்கல் கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏனைய கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை...
ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரை தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் 50-60 கிலோமீட்டர்  வேகத்தில் பலத்த காற்று  வீசக்கூடும். இதன் காரணமாக மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை ஆகஸ்ட் 26 ஆம் தேதி  இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 2.5 முதல் 2.8 மீட்டர் வரை எழும் பக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;