tamilnadu

img

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் 4 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை:
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் நீலகிரி, தருமபுரி, சேலம், கோவை மாவட்டங்களில் கனமழை பெய் யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸூம் குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும்.வியாழனன்று  வட கடலோரத் தமிழகம், புதுவை, காரைக்கால், சென்னை, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங் களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி, தருமபுரி, சேலம், கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சூறாவளி காற்று வீசும் என்பதால் மாலத்தீவு, லட்சத்தீவு, தெற்கு கேரளா மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் மத்திய தரைக்கடல் பகுதிக்கு ஜூலை 26-ம் தேதி வரை  மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

;