tamilnadu

img

பெரு முதலாளிகளுக்கு ரூ. 15.62 லட்சம் கோடி

தொழிலாளி கேட்டால் கையை விரிப்பதா?

அவதிப்பட்டு வரும் மக்களைப் பற்றியும், தொற்றுநோயை சீரிய முறையில் எதிர்கொள்வது பற்றியும் முழுமையான அக்கறையின்மையையே தொலைக்காட்சியில் ஏப்ரல் 14 அன்று பிரதமர் மோடி ஆற்றிய உரை பிரதிபலிக்கிறது.

பிரதமர் ஏப்ரல் 14 அன்று நாட்டு மக்களிடையே உரையாடியபோது, மே மாதம் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொற்பொழி வாற்றினார். ஆனால், இந்த ஊரடங்கு காலத்தை வெற்றிகரமாக செயல்படுத்திட ஏதுவாகவும், பல கோடி எண்ணிக்கையில் உள்ள ஏழை உழைப்பாளி மக்கள் உயிர் வாழ்வதை உத்தரவாதம் செய்யவும் அவரது அரசு என்ன செய்யப் போகிறது என்பது குறித்து அவர் கனத்த மௌனத் தையே கடைப்பிடித்தார். மின்னணு ஊடகங்களில் அமைச்சர்கள் தோன்றி அறி வுரைகளை அளிப்பதை தொடர்கின்ற அதே நேரத்தில், மக்களே தங்களுக்கு அருகில் வாழும் ஏழை மக்களை பராமரிக்க வேண்டும் எனப் பிரதமர் வேண்டுகோள் விடுத்தது மிகவும் மோசமான கேலிக் கூத்தாகும்.

வஞ்சக நோக்கில் நிவாரண நிதி திட்டம்

ஊரடங்கு நிலையால் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கு வெறும் 1.70 லட்சம் கோடி ரூபாய்கள் மதிப்பிலான நிவாரணத் திட்டம் மட்டுமே இதுவரை அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண மக்களுக்கென அறிவிக்க ப்பட்டுள்ள இந்நிவாரணத் திட்டத்திற்கு, வெறும் 79000 கோடி ரூபாய்க ளை (விலை யில்லா ரேசன் பொரு ட்களுக்கு 45000 கோடி ரூபாய்களும், பெண்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் ரொக்கமாக வங்கிக் கணக்கில் செலுத்த 34000 கோடி ரூபாய்கள்) மட்டுமே அரசு அளித்துள்ளது. நிவாரணத் திட்டத் திற்கான மீதித் தொகை, கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய நிதி மற்றும் தொழிலாளர்களுக்குச் சொந்தமான இதர சமூக நலத் திட்டங்க ளுக்கான நிதிகளிலிருந்து சரி செய்யப் படும். வஞ்சக நோக்கத்தோடு ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களையும் இதர நிதிகளையும் ஒன்றாக்கி கொரோனா நிவாரண நிதி என புதிய பெயர் சூட்டி யிருப்பது புதுமையே.

பட்ஜெட் மூலமும், அதன் பின்னர் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் வாயிலாகவும் விரல் விட்டு எண்ணக்கூ டிய எண்ணிக்கையில் உள்ள கார்ப்பரேட்டு களுக்கு சலுகைககளாக / ஊக்கத் தொகை யாக / வரிச்சலுகையாக 7.78 லட்சம் கோடி ரூபாய்களுக்கான சலுகை ஒரு சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப் பட்டது. இவ்வளவு பெரிய தொகை அளிக் கப்பட்டிருப்பதை பார்க்கிறபோதும், புரிந்து கொள்கிற போதும் இவர்களது வஞ்சகத் திட்டம் தெளிவாகிறது. இதற்கு முன்னர், இதே கார்ப்பரேட்டுகள் செலுத்த வேண்டிய நேரடி வரித் தொகையில் 5.84 லட்சம் கோடி ரூபாய்க ளும், கடந்த ஓராண்டு காலத்தில் இவர்கள் வங்கிகளிலிருந்து வாங்கியிருந்த கடனில் கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி ரூபாய்க ளும் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆக மொத்தத்தில், மக்களின் வரிப் பணத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசு கஜானா விலிருந்தும், வங்கி நடைமுறையில் உள்ள மக்களின் பணத்தி லிருந்தும் 15.62 லட்சம் கோடி ரூபாய்கள் கார்ப்ப ரேட்டுகளுக்கு அள்ளித் தரப்பட்டுள்ளன. 

தொழிலாளர்களின் கோரிக்கை புறக்கணிப்பு

இத்தகைய பின்னணியில், தொழிலா ளர்களின் வங்கிக் கணக்கிற்கு ரொக்கமாக செலுத்துவதன் மூலம் ஒருங்கிணைந்த வருமான ஆதரவுத் திட்டத்திற்கான தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கை ஆணவத்துடன் புறக்கணிக்கப் படுகிறது. சொல்லப் போனால், நாட்டி லுள்ள 32.72 கோடி குடும்பங்களில் 80 சதவீதத்தினருக்கு மூன்று மாத காலத்திற்கு மாதந்தோறும் ரூ.7 ஆயிரம் அளிப்பதற்கு 5.04 லட்சம் கோடி ரூபாய்கள் மட்டுமே – அதாவது கார்ப்பரேட்டுகளுக்கும், பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும் அளிக்கப்பட்ட 15.62 லட்சம் கோடி ரூபாய்களுக்கான சலுகை யில் சுமார் மூன்றில் ஒரு பங்கே – தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

வரிவிலக்குகள், சலுகைகள் மற்றும் வெகுமதிகளை பெரும் கார்ப்பரேட்டு நிறுவனங்களுக்கு அளிக்கும் அதே நேரத்தில், தங்களது வேலை வாய்ப்பு களையும், நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல நிதி ஆதரவினை அளிக்குமாறு நடுத்தர, சிறு மற்றும் குறு நிறுவனங்களின் கோரிக்கை ஆணவத்துடன் அலட்சியம் செய்யப்படுகிறது. விரல் விட்டு எண்ணக் கூடிய எண்ணிக்கையில் உள்ள தனது அர சியல் நன்கொடையாளர்களின் நலனில் பெரும் அக்கறை கொண்டு, கோடிக் கணக் கான சாதாரண மக்களின் நலன் குறித்து எள்ளளவும் அக்கறை யற்ற இத்தகைய போக்கே ஜனநாயக பூர்வமாக தேர்ந் தெடுக்கப்பட்ட அரசின் உண்மையான முகமாக உள்ளது.

இத்தகைய நிலையில், நாளொன் றுக்கு  வேலை நேரத்தை 8 மணி நேரம் என்பதிலிருந்து 12 மணி நேரமாக அதிக ரிப்பதோடு, அனைத்து தொழிலாளர் நலச் சட்டங்களையும் முதலாளிகள் அப்பட்ட மாக மீறுவதை சட்டபூர்வமாக ஆக்கிட, முதலாளிகளுக்கு ஆதரவாக அச் சட்டங் களை திருத்துவதை வேகப்படுத்தும் நடவடிக்கைகளை ஆட்சி அதிகாரத்தி லிருக்கும் நவீன தாராளவாத முதலாளித் துவ அமைப்பின் பாதுகாவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அரசின் இந் நடவடிக்கைகள், தங்களது வாழ்வை நடத்திட ஏற்கனவே நேரடியாக போராடி வரும் உழைப்பாளி மக்களின் ரத்தத்தை யும், வியர்வையையும் கொடூரமாக உறிஞ்சும் கார்ப்பரேட்டுகளுக்கும், பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும் மேலும் அளிக்கப்படும் சலுகை களாகும். 

ஆட்சியாளர்களால் அவமதிக்கப்படும் மக்கள்

கொரோனா தொற்றுநோய் குறித்தும், ஊரடங்கு நிலை மேலும் நீட்டிக்கப்பட் டுள்ளது குறித்தும் தொடர்கிற மக்களின் கவலை, ஆட்சியாளர்களால் அவமதிக் கப்படுகிறது. அரசின் நடவடிக்கை களுக்குள் அடங்கியுள்ள இத்தகைய வஞ்சகமான, மோசடியான திட்டத்தை உழைக்கும் வர்க்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள இயலாது.

தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப் படக்கூடாது, ஊரடங்கு காலத்திற்கான ஊதியம் முழுமை யாக அளிக்கப்பட வேண்டும் என்பது குறித்து தொழிலாளர் நலத்துறை செயலர், உள்துறை செயலர் வழிகாட்டுதல்களையும், அறிவுறுத் தல்களையும் வெளியிட்டு ள்ளது. இன் றைக்கு நாட்டு மக்களிடையே உரையா டும்போது பிரதமரும்கூட இதுபற்றி குறிப் பிட்டார். ஆனால், இவற்றை அமலாக்கு வது எந்த அளவில் உள்ளது?

வேலையிலிருந்து நீக்கம் குடியிருப்பிலிருந்து வெளியேற்றம்

ஒப்பந்தத் தொழிலாளர்கள், தினக் கூலிகள் மட்டுமின்றி நிரந்தரத் தொழிலா ளர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் பல நிறுவனங்களில் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், பல பொதுத்துறை நிறுவனங்களில் பணி யாற்றும் ஒப்பந்த/தினக்கூலி தொழிலா ளர்கள் உள்ளிட்டு தேயிலைத் தோட்டங்கள், சணல் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைத் துறை, பல்வேறு கட்டுமானப் பணிகள் ஆகியவற்றில் வேலை பார்க்கும் பல்லாயி ரக்கணக்கான தொழிலாளர்களுக்கு மார்ச் 2020-க்கான ஊதியம் அளிக்கப்பட வில்லை. அரசின் உத்தரவு இப்படி அப்பட்டமாக மீறப்படுவதை சம்பந்தப் பட்ட அரசுகள் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கின்றன. உள்துறை அமைச்சகம் தெளிவான உத்தரவுகளை அளித்தபோதும், தொழிற்சாலைகளிலும் சேவைத் துறையிலும் வேலை செய்து வரும் கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதோடு, அவர்களது குடியி ருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட் டுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களோடு பசியின் கொடுமையில் இருக்க இடமின்றி வாடி வருகின்றனர். 

அரசின் மனிதாபிமானமற்ற அணுகுமுறை

தேசத்தின் சொத்துக்களை உருவாக்கு வதில் உண்மையான பங்களிப்பை அளித்து வரும் இம்மக்கள் அனுபவித்து வரும் அல்லல்கள் பற்றி தனது உரையில் குறிப்பிடக் கூட பிரதமர் அக்கறை கொண்டிருக்கவில்லை. ஏனெனில், பெரும் எண்ணிக்கையிலான சாதாரண மக்களுக்கு ஆதரவாக இல்லாது சுரண்டும் வர்க்கத்திற்கு ஆதர வான தத்துவத்தை ஆளும் வர்க்கம் கொண்டிருப்பதே இதற்குக் காரண மாகும். அவதிப்பட்டு வரும் மக்கள் குறித்து மனிதாபிமானமற்ற முறையி லான அணுகுமுறையைக் கொண்டுள்ள அரசின் இத்தகைய போக்கை சிஐடியு கண்டிக்கிறது.

தனது கார்ப்பரேட் முதலாளிகளைத் திருப்திப்படுத்த, சட்டத் தொகுப்பு மூலமாகவும், அரசு உத்தரவுகள் அல்லது அவசரச் சட்டங்கள் மூலமாகவும் முத லாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்திட மேற் கொள்ளப்படும் வஞ்சகமான நடவடிக்கை களுக்கு தனது வருத்தத்தை தெரி வித்துக் கொள்வதோடு, அவற்றை சிஐடியு கண்டிக்கிறது. 

தொழிலாளர்களுடன் ஆலோசித்திடுக!

தொழிற்சங்கங்களை கலந்தாலோ சிக்காது தன்னிச்சையாக ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் தொழிலாளர்கள் அவற்றை நிராகரிப்ப தோடு, அவற்றிற்கெதிரான போராட்டங்க ளில் ஈடுபடுவர். இவ்விஷயத்தில் மிகப் பெரிய பங்குதாரராக உள்ள தொழி லாளர்களுடன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அரசு கலந்தாலோசிக்க வேண்டும்.

இத்தகைய இக்கட்டானதொரு சூழலில் சிஐடியு தனது கோரிக்கைகளை வலியுறுத்துகிறது. மேலும், ஊடகங்களின் வாயிலாக அறிவுரைகளை அள்ளி அளிப்பதற்குப் பதிலாக, களத்தில் செயல்படுவதோடு, மத்தியிலும் மாநிலங்களிலும் உள்ள அரசுகள் நேரடியாக செயல்படுத்துகிற சட்டபூர்வ நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும். இவை மேலும் காலதாமதம் எதுவுமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என சிஐடியு வலியுறுத்துகிறது. 

இதில் கீழ்க்காணும் நடவடிக்கை களும் இடம் பெற்றிருக்க வேண்டும்.

  • உலக சராசரி எண்ணிக்கைக்கு ஈடான அளவில் இந்தியாவில் பரிசோதனை கள் மேற்கொள்ளப்படுகின்ற வகையில் பரிசோதனைக்கான ஏற்பாடுகளை அதிகரித்திட உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதிகரித்து வரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான எண்ணிக்கை யில் பரிசோதனைக் கருவிகளும் பாதுகாப்பு உபகரணங்களும் கிடைப்ப தையும், மையங்கள் அமைக்கப்படு வதையும் உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஆட்குறைப்பு மற்றும் கதவடைப்பு நடவடிக்கைகளை ஒப்பந்த, தினக்கூலி மற்றும் நிரந்தரத் தொழிலாளர்களும் எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இத்தொழிலாளர்களின் வேலை வாய்ப்புகளும் ஊதியங்களும், சமூக நலப் பயன்களும் பாதுகாக்கப்பட தனியார் நிறுவனங்களும், பொதுத் துறை நிறுவனங்களும் வலியுறுத் தப்பட வேண்டும். 
  •     முதலாளிகளுக்கு ஆதரவாக அன்றாட வேலை நேரத்தை அதிகரிப்பதோடு, பணி நிலைமைகளில் மாற்றங்களை செய்வதற்காக தொழிலாளர் நலச் சட்டங்களில் தன்னிச்சையாக திருத்தங்கள் செய்யக் கூடாது.     தங்களது துறையில் வேலைவாய்ப்பு களை பாதுகாப்பதோடு, உற்பத்தி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற் சாலைகளுக்கு நேரடி நிதி ஆதரவு அளிக்கப்பட வேண்டும்.
  •     முறைசாரா துறையிலுள்ள 25 வயதிற்குட்பட்ட தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரத்தையும், 25 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரத்தையும் அவர்களது வங்கிக் கணக்கு/ஜன்தன் கணக்கில் செலுத்தப்படுவதை உத்தரவாதம் செய்ய வேண்டும்.     இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியத் தொகையை ரூ. 6000/- என்ற குறைந்தபட்ச நிலைக்கு உயர்த்த வேண்டும்.
  •     கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் நேரடியாகப் பாதிக்கப் பட்டு, வேலைக்கு வராதிருக்க நிர்ப்பந்திக்கப்பட்ட தொழிலாளர்க ளுக்கு அவர்களது முதலாளிகளால் ஊதியத்துடன் விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.
  •     ஊரடங்கு காலத்தில் ஊதிய வெட்டு, விடுப்பு நாட்களில் கழித்துக் கொள்வது போன்ற நடவடிக்கைகள் அல்லது ஆட்குறைப்பு ஆகியன அனுமதிக்கப் படக் கூடாது.
  •     அரசின் கையிருப்பில் உள்ள பெருமள விலான தானியங்களைக் கொண்டு முறைசாரா துறை சார்ந்த தொழிலா ளர்களுக்கு ரேசன் பொருட்கள் விலையின்றி அளிக்கப்பட வேண்டும்.     தற்போதுள்ள நிலையை சாதக மாக்கிக் கொண்டு உணவு தானி யங்கள், மருந்துப் பொருட்கள், சானிடை சர்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் பதுக்கல்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • தற்போது பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கு அவர்களது வசிப்பிடங்களிலேயே மதிய உணவு அளிக்கப்பட தனி யாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இத்தகைய நடவடிக்கையின் மூலம் மாணவ, மாணவியர் பயனடை வதோடு, சத்துணவு ஊழியர்களது பணியும் பாதுகாக்கப்படும்.
  • பல்வேறு வழிமுறைகளில் சுகாதார மற்றும் இதர சேவைகளை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஆஷா பணியாளர்கள், துணை நிலை சுகாதாரப் பணியாளர்கள் (ஏஎன்எம்எஸ்) மற்றும் சுகாதாரத் துறையின் இதர திட்டப் பணியா ளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் போன்றவர்களுக்கான சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் உத்தரவாதம் செய்யப்பட வேண்டும். தற்போதைய ஊரடங்கு நிலையில் அரசின் அனுமதி யோடு செயல்பட்டு வரும் அத்தியா வசிய சேவைகள், போக்கு வரத்து மற்றும் சில தொழிற்சாலை களில் பணியாற்றி வரும் தொழிலா ளர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு களும் கருவிகளும் அளிக்கப்பட வேண்டும்.
  • ஆஷா பணியாளர்கள் மற்றும் சுகா தாரத் துறையில் உள்ள இதர திட்டப் பணியாளர்களின் ஊதியத்தை மாதாந்திர அடிப்படையில் உயர்த்திட வேண்டும்.
  • சானிடைசர்கள் மற்றும் இதர கருவிகள் உள்ளிட்ட கச்சாப் பொருட்கள், பரிசோதனைக் கருவிகள் மற்றும் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்திட பொதுத்துறை மருந்து உற்பத்தி நிறுவனங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்.

 

 


 

;