tamilnadu

img

ராணுவ வீரர் பழனியின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி... 

ராமநாதபுரம் 
கடந்த வாரம் லடாக் பகுதியில் சீன ராணுவத்தினருக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் இருதரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்த கடுக்கலூரைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி உயிரிழந்தார்.  

ராணுவ வீரர் பழனியின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.மணிகண்டன் ரூ. 2.25 லட்சமும், திமுக மாவட்டப் பொறுப்பாளர் காதர்பாட்ஷா, முத்துராமலிங்கம் ஆகியோர் ரூ.2 லட்சம் வழங்கிய நிலையில், விஜய் ரசிகர்களும் இந்த பட்டியலில் இணைந்துள்ளனர்.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளான நேற்று ராமநாதபுரம் மற்றும் தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ராணுவ வீரர் பழனியின் வீட்டுக்கு சென்று அவரது மனைவியிடம் ரூ.1 லட்சம் நிதிக்கான காசோலையை வழங்கினர். ஊரடங்கிலும் ஆதரவு கரம் நீட்டும் விஜய் ரசிகர்களை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.  

;