tamilnadu

img

மோடியை எதிர்த்து 50 விவசாயிகள்

புதுதில்லி,ஏப்.28- கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத பிரதமர் மோடியை எதிர்த்து, வாரணாசி மக்களவைத் தொகுதியில் 50 மஞ்சள் விவசாயிகள் போட்டியிடுகின்றனர்.நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக வறட்சியால் மஞ்சள் விவசாயிகள் கடும் துன்பத்திற்கு உள்ளாகினர். இந்த ஆண்டு மஞ்சளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரத்து 200 ரூபாயி லிருந்து, 3 ஆயிரத்து 200 ரூபாயாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் வாரணாசியில் சுயேட்சை வேட்பாளர்களாக களம் காணும் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சள் விவசாயிகள் கூறு கையில், தங்கள் பிரச்சனைகள் மீது கவனத்தை ஈர்க்கச் செய்யவே பிரதமர்போட்டியிடும் தொகுதியில் போட்டியிடுவதாகவும் மஞ்சள் விவசாயி களுக்காக தனி ஆணையம் அமைத்து, மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை அரசுக்கு எட்டச் செய்யவே இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும் தெரி வித்துள்ளனர். மோடி அரசின் விவசாயிகள் விரோதப் போக்கை எதிர்த்து, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவரான அய்யாக்கண்ணு, தமிழகத்திலிருந்து தில்லிக்கு விவசாயிகளை அழைத்துச் சென்று ‘தொடர் போராட்டம்’நடத்தினார். மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டி யிடுவதாக அறிவித்திருந்தார். ஆனால் பாஜக தலைவருடன் நடந்த ரகசிய பேச்சுவார்த்தையில் ‘உடன்பாடு’ ஏற்பட்டு போட்டியிலிருந்து விலகுவ தாக, அவரது சங்கத்தினரே அதிர்ச்சி யடையும் வகையில் அறிவித்தார். இந்நிலையில் மோடியை எதிர்த்துமஞ்சள் விவசாயிகள் போட்டியிடுவது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள் ளது.50 விவசாயிகள் போட்டியிடுவது, மோடிக்கும் பாஜகவிற்கும் பெரும் தலைவலியாக இருக்கப்போகிறது என்று அரசியல் கட்சியினர் தெரிவிக் கின்றனர். 

;