tamilnadu

img

மகேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்


சென்னை,

இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலை மரணம் அடைந்தார். 


பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த மகேந்திரன் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணம் அடைந்தார். 

யதார்த்த சினிமாவின் இயக்குநர் என வர்ணிக்கப்படும் இயக்குநர் மகேந்திரன் 1978-ம் ஆண்டு வெளிவந்த முள்ளும் மலரும் படம் மூலம் அறிமுகம் ஆனவர். இதைத்தொடர்ந்து உதிரி பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த படங்களை இயக்கியவர். தமிழ் திரைப்படத் துறைக்கு பெருமை சேர்த்த இயக்குநர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர்.

அண்மைக்காலங்களில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து அண்மையில் வெளிவந்த 'பேட்ட' திரைப்படத்தில் மகேந்திரன் நடித்திருந்தார். மேலும் தெறி, சீதக்காதி, மிஸ்டர் சந்திரமௌலி போன்ற பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறும் என்று அவரது மகன் ஜான் மகேந்திரன் தெரிவித்துள்ளார்



;