tamilnadu

img

இரண்டு மணிநேரத்தில் 42.2 கி.மீ ஓடிய கென்யா வீரர்

கென்யாவின் தடகள வீரர் கிப்கோஜ் இரண்டு மணி நேரத்திற்குள் 42.2 கி.மீ மராத்தான் ஒடி சாதனை படைத்துள்ளார்.

கென்யாவின் தடகள வீரர் எலியுட் கிப்கோஜ் ஒலிம்பிக்கில் தங்கம் பதக்கம் வென்றவர். இவர் ஆஸ்திரியாவின் வியன்னாவில் நடந்த மராத்தான் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இதில் 1 மணி நேரம் 59 நிமிடங்கள், 40 வினாடிகளில் 42.2 கி.மீட்டர் ஓடியுள்ளார். இதன் மூலம் இரண்டு மணிநேரத்திற்குள் 42.2 கி.மீட்டர் மராத்தான் ஓடிய முதல் தடகள வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னர் நடந்த 2017 மராத்தானில், 26 வினாடிகளில் சாதனையை தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

;