tamilnadu

img

காக்கிச் சட்டைக்குள் கருணை உள்ளம்....  கிராம மக்களுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை இலவசமாக வழங்கிய பெண் காவல்துறை ஆய்வாளர்...

தஞ்சாவூர்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பெரும்பாலான கிராம பகுதிகளில் ஒருவேளை உணவுக்கே வழியின்றி வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். 
தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் காவல்துறை ஆய்வாளர் சுகுணா (40), தனது சொந்தச் செலவில், பந்தல்லூரைச் சுற்றியுள்ள, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள கிராம மக்களுக்கு, ஊரடங்கு துவங்கிய மறுநாளில் இருந்து தினசரி இரண்டு கிராமங்களை தேர்வு செய்து ஐந்து கிலோ அரிசி, சோப்பு, மளிகை பொருட்கள் ஆகியவற்றை வழங்கி பலரையும் நெகிழ வைத்திருக்கிறார்.

இது குறித்து காவல்துறை ஆய்வாளர் சுகுணா கூறுகையில்,"பந்தநல்லூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட, பந்தநல்லூர், கீழக்காட்டூர், மேலக்காட்டூர் பல்வேறு கிராமங்களில் வசிப்பவர்கள் பலரும், விவசாயக்கூலி தொழிலாளிகள், தூய்மை பணியாளர்கள் தான் அதிகம் உள்ளனர். அவர்கள் தினமும், வேலைக்கு சென்றால் தான் அவர்களின் வீட்டில் உலை கொதிக்கும் என்கிற நிலை தான். தற்போது ஊரடங்கு உத்தரவால், வேலை இல்லாமல், அவர்களின் மொத்த குடும்பமும் பசியோடு இருப்பதை, கொரோனா விழிப்புணர்வுக்காக, ஒரு கிராமத்திற்கு சென்ற போது, பெண் ஒருவர் அவருடையை நான்கு குழந்தைகளுக்கும் கஞ்சி வைத்து கொடுத்துக் கொண்டு இருந்ததை பார்த்து மனதளவில் உணர்ந்தே இந்த சிறு உதவியை செய்துள்ளேன். மேலும், சிலரிடம் உதவி கேட்டுள்ளேன். கிடைத்தால் மகிழ்ச்சி தான் என்றார்.

உதவ நினைப்பவர்களும், வாழ்த்த நினைப்பவர்களும் தொடர்பு கொள்ளலாம் : சுகுணா காவல்துறை ஆய்வாளர் – 94981 62508 

;