tamilnadu

img

இரண்டாயிரம் வழக்குப் போட்டாலும் அஞ்ச மாட்டோம் : ஸ்டாலின் பேச்சு

தஞ்சாவூர், ஜன.30– தஞ்சாவூரில் வியாழக்கிழமை, தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் சகோதரர் ராஜ்குமார் இல்ல திருமண விழா நடை பெற்றது. இதில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் செ.ராமலிங்கம், சு.திருநாவுக்கரசர், ஜி.செல்வராஜ், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, திமுக முதன்மை செயலாளர் கே.என். நேரு, முன்னாள் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல் வம், உபயதுல்லா, சசிகலா சகோதர ரும் அண்ணா திராவிடர் கழக தலைவ ருமானதிவாகரன் மற்றும் எம்எல் ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் இதர கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். விழாவில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசியதாவது; புதுக்கோட்டையில் பா.ஜ.க வின் மாநில துணைத் தலைவராக இருந்த அரசக்குமார் ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என கூறினார். பின்னர் அவர் தி.மு.க வில் இணைந்து விட்டார். தற்போது திவாகரனும் அப்படியே பேசி உள்ளார். அவர் எங்கே செல்வார் என்பது தெரியாது, அது அவரின் விருப்பம். தமிழ்நாட்டில் நடைபெறுவதை ஆட்சி என கூற முடியாது அது காட்சி. உள்ளாட்சி தேர்தலில் விழிப் போடு இருந்த காரணத்தால் தான் இந்த அளவிற்கு வெற்றி பெற்று இருக்கி றோம். அதற்காக தான் தொடர்ந்து நீதி மன்றத்தை நாம் நாடினோம். முறையாக தேர்தல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருந்தால் 90 சதவீத வெற்றி பெற்று இருப்போம். உள்ளாட்சி தேர்தல் வெற்றி என்பது சட்டமன்ற தேர்தல் வெற்றியின் அடித்த ளம். இதை உணர்ந்து கொண்டு தான் இப்போதே நம் மீது பல்வேறு விமர்ச னங்களை கூறி வருகிறார்கள் என் மீது இரண்டு வழக்கு போட்டுள்ளார் கள். இரண்டு வழக்கு அல்ல, இரண்டா யிரம் வழக்கு போட்டாலும் அஞ்ச மாட்டோம். மிசாவையே கண்ட வர்கள் நாங்கள். ஏழை எளிய மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை தடுத்து நிறுத்தக் கூடிய ஆற்றல் இந்த ஆட்சிக்கு இல்லை. மத்திய அரசு கொண்டு வரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்தாமல் மாநில அரசு வேடிக்கை பார்க்கிறது. இதையெல்லாம் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்றார்.

;