tamilnadu

தொழிற்பயிற்சி ஆசிரியர் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள்

தஞ்சாவூர், ஜன.9- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பையில் தமிழ்நாடு இடை நிலை ஆசிரியர் பயிற்சி பெற்ற தொழில்கல்வி  ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாநிலத் துணைச் செயலாளர் சிதம்பரம் வரவேற்றார். மாநில துணைப் பொ துச் செயலாளர் சுந்தரவடிவேலு, மாநிலப் பொருளாளர் அன்னலெட்சுமி, துணைத்தலை வர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த உயர்நிலைப்பள்ளி தொழில்கல்வி ஆசிரியர் கள் 35 நபருக்கு, பயிற்சியின் கடைசித் தேர்விற்கு அடுத்தநாள் முதல் ஊதிய நிலு வைத் தொகை சுமார் ரூ.1 கோடிக்கும் அதிக மான தொகையை வழங்கி உத்தரவிட்ட தமிழக முதல்வர், கல்வித்துறை அமைச்சர், கல்வித்துறை முதன்மைச் செயலாளர், கல்வித்துறை துணைச் செயலாளர், பள்ளிக் கல்வி இயக்குநர், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக்கல்வி) மற்றும் அலுவலர் பெருமக்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேல்நிலைப்பள்ளி, தொழிற்கல்வி ஆசிரி யர்களுக்கு பகுதிநேரப் பணிக்காலத்தில் 50 சதவீத ஓய்வூதியத்திற்கு சேர்த்து உத்தர விட்டதைப் போல, தொடக்க கல்வித்துறை யில் பகுதிநேரப் பணியாற்றி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் முழுநேரமாகப் பணி உயர்வு செய்யப்பட்ட, நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் (இடை நிலைக்கல்வி) பணி உயர்வு பெற்றவர்க ளுக்கு பகுதி நேரப் பணிக்காலத்தில் 50 சதவீத ஓய்வூதியத்திற்கு சேர்த்து உத்தரவிட தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.  அரசு உத்தரவுப்படி, குறுகிய கால இடை நிலை ஆசிரியர் பயிற்சிக்குப் பின், இடை நிலை ஆசிரியர் பாட போதனையை செய்து வரும் மேற்கண்ட ஆசிரியர்களில், முதுகலை முடித்துள்ளவர்களுக்கு இரண்டாவது ஊக்க ஊதியம் வழங்கிடவும் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலா ளர் வெள்ளைச்சாமி சிறப்புரையாற்றினார். மகளிர் அணிச் செயலாளர் அடைக்கலமேரி, மாநிலத் துணைத்தலைவர் தர்மதுரை, மாவட்ட மகளிர் அணித் தலைவி ரோஸ்லின் மேரி, உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

;