tamilnadu

img

நலத்திட்டங்கள் நிறைவேற்ற போதிய நிதியில்லை சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் பேச்சு

தஞ்சாவூர், மே 30- தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு சாதாரணக் கூட்டம், வெள்ளிக்கிழமை ஒன்றிய  தலைவர் மு.கி.முத்து மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் கை.கோவிந்தராஜன் (வ.ஊ) முன்னிலை வகித்தார். ஒன்றியக் குழு துணைத் தலைவர் முத்துலெட்சுமி உறுப்பினர்கள் நாடியம் சிவ.மதி வாணன், குழ.செ.அருள்நம்பி, கவிதா, ராஜலெட்சுமி, அமுதா, உமா, மீனவரா ஜன், அருந்ததி, கருப்பையா,சாகுல் ஹமீது, செய்யது முகமது, அழகுமீனா, சுதாகர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஒன்றிய தலைவர் மு.கி.முத்து மாணிக்கம் பேசுகையில்,“சேதுபா வாசத்திரம் ஒன்றியத்தில், நலத்திட்டங்கள் நிறைவேற்ற போதிய நிதி இல்லாத நிலை உள்ளது என்றார்.  நாடியம் சிவ.மதிவாணன் (அதிமுக) ஊராட்சி பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் போது ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை.

களப்பணிகள் நடைபெறும் போது ஒன்றியக்குழு உறுப் பினர்களும் பங்கெடுத்துக் கொள்ள ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு உத்தரவிட வேண்டும்” என்றார். குழ.செ. அருள்நம்பி (அதிமுக) பெருமகளூர் துணை மின் நிலையத்தில் இருந்து விவசாயத்த்திற்கு 24 மணி நேரமும், மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  சுதாகர்(தி.மு.க) திருவத்தேவன் ஊராட்சியில் கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் சுமார் 15 குடும்பங்கள் உள்ளது. இவர்கள் பயன்படும் வகையில் பொது சுகாதார வளாகம் கட்டிக்கொடுக்க வேண்டும்” என் றார். தனிமனித இடைவெளியுடன் நடைபெற்ற கூட்டத்தில் 15 ஆவது நிதிக் குழு நிதியில் இருந்து 1 கோடியே 9 லட்சம் ரூபாய்க்கு முன்னுரிமை அடிப்படையில் குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை பணிகள் தேர்வு செய்யப்பட்டது.

ஆணையர் கை.கோ விந்தராஜன் பேசும்போது, “முடச்சிக்காடு கலைஞர் நகர் சமத்துவபுரத்தில் ஒரு நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த நிலையில் மருத்துவ குழுவினர், சுகாதார பணியாளர்கள் அயராத பணியால் கொரோனா இல்லாத ஒன்றியமாக நிகழ்கிறது. உறுப்பினர்க ளின் கோரிக்கைகள் அனைத் தும் விரைவில் தீர்த்து வைக்கப்படும்” என்றார். நிறைவாக வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ரமேஷ் நன்றி தெரிவித்தார்.  ஒன்றிய மேலாளர் செல்வேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;