tamilnadu

சிபிஎம் - மாதர் சங்கப் போராட்டம் எதிரொலி வடமாநில பெண்ணை பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்திய கும்பலில் 3 பேருக்கு ‘குண்டாஸ்’

தஞ்சாவூர், ஜூலை 4-  தஞ்சாவூரில் வடமாநில பெண்ணை  வீட்டு வேலைக்கு அழைத்து வந்து பாலி யல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பலை சேர்ந்த மூவர் குண்டர் சட்டத்தில் கைது  செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியைச் சேர்ந்த செந்தில்குமார் (49), அவரது மனைவி ராஜம் (47), லஞ்ச வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்  துறை உதவி ஆய்வாளர் பிரபாகரன்  (65), ராமச்சந்திரன் (40), புதுக்கோ ட்டை மாவட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி (51) உள்ளிட்ட 5 பேரும், மேற்கு வங்க  மாநிலத்தை சேர்ந்த, இளம் பெண்ணை,  வீட்டு வேலைக்கு என அழைத்து வந்து  பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நிலை யில், அப்பெண் சொந்த ஊருக்கு செல்ல  வேண்டும் என கூறி அடம்பிடித்த நிலை யில், கடந்த 1ஆம் தேதி காரில் அழைத்து  சென்று, திருச்சி – தஞ்சை தேசிய நெடு ஞ்சாலையில் பட்டப்பகலில் அடித்து துன்புறுத்தி வீசி சென்றனர்.   அவரை மாதர் சங்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்து, அவ ருக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரைச் சந்தி த்து மனு அளித்தனர்.  இது தொடர்பாக, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, 5 பேரையும் கடந்த ஜூன் 4 ஆம் தேதி இரவு கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்ட கா வல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் பரி ந்துரையின் பெயரில், ஆட்சியர் கோ விந்தராவ் உத்தரவின்படி, செந்தில்கு மார், பிரபாகரன், ராமச்சந்திரன் ஆகிய  மூவரும் குண்டர் சட்டத்தின் கீழ், கைது  செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில்  அடைக்கப்பட்டனர்.

;