தஞ்சாவூர் மே.24-தஞ்சாவூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் டி.கே.ஜி.நீலமேகம் 88,972 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக வந்த அதிமுக வேட்பாளர் ஆர்.காந்தி 54,922 பெற்றார். மூன்றாவதாக வந்த அமமுக வேட்பாளர் எம்.ரெங்கசாமி பெற்ற வாக்குகள் 20,006 ஆகும். திமுக வேட்பாளர் தனக்கு அடுத்தபடியாக வந்த அதிமுக வேட்பாளரை விட 33,980 வாக்குகள் கூடுதலாக பெற்றார். தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மொத்தம் ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகள் விவரம்:- டி.கே.ஜி.நீலமேகம் (திமுக) 88,972, ஆர்.காந்தி (அதிமுக) 54,992, எம்.கார்த்தி (நாம் தமிழர்) 11,182, எம்.ரெங்கசாமி (அமமுக) 20,006, பி.துரைசாமி (மக்கள் நீதி மய்யம்) 9,345, எம்.என்.சரவணன் (சமாஜ்வாதி பார்வர்ட் பிளாக் ) 337, எம்.சந்தோஷ்(சுயே) 404 ஆர்.சப்தகிரி (சுயே) 117 ஜி.செல்வராஜ் (சுயே) 220 டி.தினேஷ்பாபு (சுயே) 144 பொன்.பழனிவேலு (சுயே) 381 எம்.பாபுஜி (சுயே) 202 ஏ.ரெங்கசாமி (சுயே) 501 நோட்டா 2,797 தஞ்சாவூர் சட்மன்ற தொகுதி மொத்த வாக்குகள் 2,77,269 பதிவான வாக்குகள் 1,89,600.வியாழக்கிழமை அன்று இரவு 11 மணிக்கு திமுக வேட்பாளர் டி.கே.ஜி.நீலமேகத்திடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் சுரேஷ் வழங்கினார். அப்போது திமுக மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ உடனிருந்தார்.