tamilnadu

தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை முக்கிய செய்திகள்

தஞ்சை, மயிலாடுதுறை பள்ளிகள் சாதனை

தரங்கம்பாடி/தஞ்சாவூர், ஜூலை 19- மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் சர்மிளா காடஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு பொதுத் தெர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனைப் படைத்துள்ளது. விலங்கியல் பாடப்பிரிவில் மாணவிகள் ஏ.சஹானா 554 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், ரோஷினி  552 மதிப்பெண்பெற்று இரண்டாமிடமும், காயத்ரிதேவி 547 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பெற்று சாதனைப் படைத்துள்ளனர். சாதனைக்காக உழைத்த ஆசிரியர், ஆசிரியைகளையும், மாணவ, மாணவியர்களையும் பள்ளி முதல்வர் பாண்டியராஜன், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் சாமுவேல்மனுவேல் ஆகியோர் பாராட்டினர்.

பிருந்தாவன் பள்ளி

பட்டுக்கோட்டை- சுக்கிரன்பட்டி பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பன்னிரெண்டாம் வகுப்பு பொது த்தேர்வில் தஞ்சை மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர். பள்ளி மாணவி என்.தாமரை 585, கே.யோகதர்ஷினி 576, எம்.பிரியதர்ஷினி 574 ஆகிய மூவரும் முதல் 3 இடங்களைப் பெற்றனர். அவர்களுக்கு பள்ளித் தாளாளர் டாக்டர் கண்ணன் மற்றும் செயலர் மோகன் ஆகியோர் பொன்னாடை அணிவித்தும் பரிசு கொடுத்தும் கவுரவித்தனர்.

மாற்றுத்திறனாளிகள் பேரவை

தஞ்சாவூர், ஜூலை 19- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக ளுக்கான சங்கத்தின் ஒன்றியப் பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, வைதேகி தலைமை வகித்தார். சிபிஎம் மாவ ட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், ஒன்றியச் செயலாளர் பி.எம்.காதர்உசேன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். புதிய நிர்வாகிகளாக 15 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. தலைவராக ஆர்.முத்துக்குமார், செயலாள ராக என்.மணிகண்டன், பொருளாளராக வைதேகி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளை மாற்று த்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.எம்.இளங்கோவன் அறிமுகம் செய்து வைத்து நிறைவுரையாற்றினார். அனைத்து ஊராட்சிகளிலும் கிளைகள் அமைப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

வி.ஏ.ஓ-க்கு பாராட்டு விழா நடத்திய நல்லாடை மக்கள்

தரங்கம்பாடி, ஜூலை 19-  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் நல்லாடை கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி பணி யிடம் மாறுதலாகியுள்ள செந்தில்குமார் என்பவருக்கு அக்கிராம மக்கள் ஒன்றுக்கூடி பாராட்டு விழா நடத்தி கவுர வித்தனர்.  நல்லாடை கிராம உதவியாளராக கடந்த 5 ஆண்டுகளாகபணிபுரிந்த செந்தில்குமார் ஊர் மாறுதலில் வேறு பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பணியாற்ற செல்கிறார். பொதுமக்களுக்கு சிறப்பாக சேவை செய்தமைக்காக ஊராட்சி மன்ற தலைவர் காவேரி ஜெயச்சந்திரன் தலைமையில் பாராட்டு விழா நடத்தினர். கிராம நிர்வாக அலுவலர் விஜய் முன்னிலை வகித்தார். அரசு அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இடப் பிரச்சனையில் ஒருவர் அடித்து கொலை

தஞ்சாவூர், ஜூலை 19-  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த தெக்கூரை சேர்ந்தவர் ஜோதிடர் முருகேசன் (48). அவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கும் இடப் பிரச்சனை இருந்துள்ளது. கடந்த ஜூலை 17 அன்று ராஜேந்திரன் அவரது உறவினர்களான அருணாச்சலம், ராசு, திருநாவுக்கரசு, சதீஷ்குமார், சாமிஅய்யா, ரங்கராஜன், சங்கர் ஆகியோர் கையில் கம்பி மற்றும் உருட்டுக்கட்டையுடன் முருகேசன் வீட்டுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதில் ஏற்பட்ட தகராறில், முருகேசன் மற்றும் மனைவி மகேஸ்வரியை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த முருகேசன், அவரது மனைவி மகேஸ்வரி ஆகிய இருவரும் ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி க்கப்பட்டனர். பிறகு முருகேசன் ஒரத்தநாடு காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து சனிக்கிழமை அதிகாலை, முருகே சன் தலை வலிக்கிறது என கூறிய நிலையில், உறவினர்கள் அவரை, மீண்டும் ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முருகேசனை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.  இது குறித்து ஒரத்தநாடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட, ராஜேந்திரன் (50),அருணாச்சலம்(53), ராசு(65), சதீஸ்குமார்(45) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 4பேரை தேடி வருகின்றனர்.

வாலிபர் சங்கத்தின் 2 புதிய கிளைகள்

நாகப்பட்டினம், ஜூலை 19-நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றியத்தைச் சேர்ந்த ராராந்தி மங்கலம், ஆண்டிப்பந்தல் ஆகிய இரு ஊர்களில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இரு புதிய கிளைகள் உருவாக்கப்பட்டுக் கொடிகள் ஏற்றப்பட்டுப் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய இரு கிளைகளின் கூட்டங்களில் வாலிபர் சங்கத்தின் திருமருகல் ஒன்றியச் செயலாளர் எஸ்.சதீஷ், ஒன்றியத் தலைவர் எம்.எஸ்.பிரபாகரன், மாவட்டத்துணைத் தலைவர் கே.பி.மார்க்ஸ் ஆகியோர் உரையாற்றினர். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்திச் சிறப்புரையாற்றினார்.