tamilnadu

அலட்சிய அதிகாரிகளால் கேள்விக்குறியான கோவில் பாதுகாப்பு தஞ்சை பெரிய கோவிலை வீடியோ எடுத்து பரபரப்பை ஏற்படுத்திய காவலர்

தஞ்சாவூர், ஜன.7–  தஞ்சாவூர் பெரியகோவில் கும்பா பிஷேக விழா வரும் பிப்.5-ல் நடை பெற உள்ளது. இதற்கான திருப்பணிக ளின் ஒரு பகுதியாக விமான கோபு ரத்தின் கலசம் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளின் கோபுர கலசங்களும் சுத்தம் செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை கீழே இறக்கப்பட்டது.  இதற்கு முன்னதாக, இந்து சமய அறநிலையத்துறையினர், தொல்லியல் துறையினர், கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆய்வு மையத்தின் கதிரியக்கப் பிரிவு குழுவினரும், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக உலோகவியல் துறையினரும் கலசத்தின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பெரியகோவில் பாதுகாப்பு கருதி, கலசம் கழற்றும் பணியை படம் எடுக்க பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  ஆனால், ஆய்வு குழுவினர் உடன் காவல்துறையினர் உள்பட சில நபர்க ளும் சென்றனர். அவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. இந்நிலையில் கோபுரத்தின் மீது ஏறிய, தஞ்சை மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜ் பாதுகாப்பு பணியை செய்யாமல், தனது மொபைல் போனில், கோபுர கலசத்துடன், கோவி லின் முழு அமைப்பையும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு அந்த வீடியோவில், 216 அடி உயர கோபுரத்தில் ஏறியது பாக்கி யம் எனவும், கலசத்தில் ஏற்பட்டுள்ள கீறல் பருந்து, கழுகுகளால் ஏற்பட்டது எனவும் தெரிவித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  கோவிலை ஆளில்லா விமானம் மூலம் படம் எடுக்க தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில், காவலரே வீடியோ எடுத்து அதை வெளியிட்ட சம்பவம், பெரியகோவிலின் பாதுகாப்பை கேலிக்கூத்தாக்கும் விதமாக உள்ளது என வரலாற்று ஆய்வாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜை, மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் நேரில் அழைத்து விசாரணை நடத்தினார்.

;