tamilnadu

ஓஎன்ஜிசி எதிர்ப்பு போராட்டக் குழுவைச் சேர்ந்த 6 பேர் கைது

கும்பகோணம், ஜூலை 4- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே  கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறு வனத்தால்  ஆழ்துளை கிணறு அமைக்க ப்பட்டு எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் கதிரா மங்கலம் கிராமத்தில் தண்ணீர் மாசுபடுவதா கவும் நிலத்தடி நீர்  குறைந்துள்ளதாகவும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த காலத்தில் மாபெ ரும் தொடர் போராட்டம் மற்றும் உண்ணாவி ரதம் அக்கிராம மக்கள் மற்றும் அனைத்து  அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டு நடைபெற்றது. அப்போராட்டம் சம்பந்தமாக போராட்ட குழுவினர் மீது பல்வேறு வழக்குகள் பதி யப்பட்டு வழக்கு நிலுவையில் இருந்து வருகி றது. இந்நிலையில் கதிராமங்கலம் கடை வீதி யில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் 160  மீட்டர் நீளத்துக்கு பூமிக்கடியில் பதிக்க ப்பட்டுள்ள கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாய் பழுதடைந்ததை மாற்றுவ தற்காக வெள்ளியன்று பணிகள் நடை பெற்றன. அப்போது, என்ன பணிகள் நடைபெறுகி றது என்பதை பார்க்க கதிராமங்கலம் போ ராட்ட குழுவைச் சேர்ந்த ராஜூ, ராஜாரா மன், தேவேந்திரன், கஸ்தூரி, கலையரசி, மகேஸ்வரி ஆகியோர் பணிகள் நடைபெற்ற இடத்துக்கு வந்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட திருவிடைமருதூர் போலீஸ் டிஎஸ்பி  அசோகன் தலைமையிலான போலீசார் “ஊர டங்கு காலத்தில் தடையை மீறி ஒன்று கூடிய தாக” கூறி ஆறு பேரையும் கைது செய்து பந்த நல்லூர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றார். இதனால் கதிராமங்கலத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.