tamilnadu

img

பள்ளி ஆண்டு விழா

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 38-ஆவது விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நிகழ்ச்சி காதிர் முகைதீன் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு, பள்ளித் தாளாளர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தலைமை வகித்தார். பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் வி.குமார், கல்வி, விளையாட்டில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கிப் பாராட்டி பேசினார்.  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் எம்.இராமகிருட்டிணன், பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் ஆர்.ஜெயபால், காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக, பள்ளித் தலைமை ஆசிரியை எம்.சுராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். உடற்கல்வி ஆசிரியை ஜி.அகிலா விளையாட்டு ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியை அனுராதா வரவேற்றுப் பேசினார். நிறைவில், ஆசிரியை எஸ்.அமுதா நன்றி கூறினார். மாணவிகளின் பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

;