tamilnadu

img

பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா

தஞ்சாவூர், ஜன.26- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஞாயிறன்று குடியரசு தின விழா நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.பாலசுப்ர மணியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசி னார். பல்கலைக்கழக பதிவாளர்(பொ) கு. சின்னப்பன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இதே போல் வல்லம் பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறு வனத்தில் (நிகர் நிலைப் பல்கலைக்கழகம்) நடைபெற்ற விழாவில், பல்கலைக்கழக துணை வேந்தர் பேரா.செ.வேலுசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இணை துணைவேந்தர் பேரா சா.தேவதாஸ், அனைத்து துறை முதன்மை யர்கள், இயக்குநர்கள், துறைத்தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய விளையாட்டு அமைப்பு ஆகியவை செய்திருந்தன.
குடவாசல்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டாட்சி யர் அலுவலகம், ஊரக உள்ளாட்சி ஒன்றிய அலு வலகம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் காவல் நிலையத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. குடவாசல் எம்.ஜி.ஆர் அரசு கல்லூரியில் துணை முதல்வர் வே.ரமேஷ்குமார் தேசியக் கொடி யேற்றினார். உடற்கல்வி இயக்குனர் புவநேந்தி ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சேங்காலிபுரம் அரசு தொடக்கப்பள்ளி விழா வில் தலைமை ஆசிரியர் இந்திரா வரவேற்புரை யாற்றினார். ஊராட்சி தலைவர் ஆர்.கண்ணன் தேசிய கொடியை ஏற்றினார். பெற்றோர் ஆசிரி யர் கழக தலைவர் வி.ஜி.கோவிந்தராஜன், மு ஊ.ம.து. தலைவர் சிவாச்சாரியார், பெ.ஆ.க.து. தலைவர் அம்பிகாபதி, மகளிர் குழு ஒருங்கி ணைப்பாளர் சாவித்திரி, அமைப்பாளர் சண்முக வடிவேல், ஆசிரியர்கள் தீபா, சிவசங்கரி கலந்து கொண்டனர். மாறுவேடப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிறை வாக ஆசிரியை சு.இந்துமதி நன்றி கூறினார். சீதக்கமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி யில் குடியரசு நாள், புதிய உள்ளாட்சிப் பிரதிநிதி களுக்குப் பாராட்டு விழா, கல்விப்புரவலராக சேர்ந்தோருக்குப் பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் சு. இராசேந்திரன் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பெற்றோர் ஆசிரி யர் கழகத் தலைவர் ச.பாலசுப்ரமணியன், ஊராட்சி தலைவர் செ.இராமலிங்கம் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் குருமூர்த்தி பரிசு வழங்கி பேசி னார்.  பள்ளி ஆசிரியர்கள் இரா நிஷா, அ.முகமதி யாசுல்தானா. வீ.முருகானந்தம், சந்தான இரு தயராஜ் கலந்து கொண்டனர். முன்னதாக உதவித் தலைமையாசிரியர் த.உதயகுமார் வர வேற்புரையாற்றினார். நிறைவாக தமிழாசிரி யர் தர்மராஜன் நன்றி கூறினார்.
கரூர்
கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் நடை பெற்ற விழாவில் தாளாளர் எஸ்.மோகனரங்கன் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்தார். செயலர் பத்மாவதி மோகனரங்கன் முன்னிலை வகித்தார்.  பரணி பார்க் கல்வி குழும முதன்மை முதல்வ ரும், அகில இந்திய திருவள்ளுவர் மாணவர் இளைஞர் இயக்கத்தின் தேசிய ஒருங்கி ணைப்பாளருமான முனைவர் ராமசுப்பிரமணி யன் சிறப்புரையாற்றினார். பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெற்றன. வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சாந்தி, பரணி பார்க் பள்ளி முதல்வர் சேகர், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்ட னர்.
தஞ்சாவூர் 
பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி தேசியக் கொடி ஏற்றி வைத்தார். துணை வட்டாட்சியர் சுந்தர மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  ஊராட்சி ஒன்றிய வடகிழக்குப் பள்ளியில் தலைமையாசிரியர் சித்ரா தேவி முன்னிலை யில், வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி கொடியேற்றி வைத்தார். ஆசிரியர் காஜா மைதீன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கௌதமன், நிர்வாகி கள் சம்சுதீன், காந்தி, எஸ்.ஜகுபர்அலி, நீல வேணி கலந்து கொண்டனர்.  கிழக்குப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பழனிவேல் கொடியேற்றி வைத்தார். தலைமை ஆசிரியர் பாலச்சந்தர் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள், சுபாஷ், சுபா, பாலசுந்தரி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் டி.பி.சுப்பையன், திருவேங்கடம், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், லோகேஸ்வரன் கலந்து கொண்டனர்.  மாவடுகுறிச்சி கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில், ஊராட்சி துணைத் தலைவர் கு.ராமநாதன் கொடியேற்றி வைத்தார். தலைமை ஆசிரியர் கை.ஈஸ்வரி, மூ.வாசுகி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி மா.ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி யில் தலைமையாசிரியர் மகேஸ்வரி கொடி யேற்றி வைத்தார். மாலா கருணாநிதி வர வேற்றார். ரவீந்திரன், பாலசுப்ரமணியன், சுந்த ரம், ரெங்கசாமி, ஊராட்சி மன்றத் தலைவர் ஆர். செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். தமிழாசிரியர் கார்த்திகேயன் சிறப்புரை யாற்றினார். ஆசிரியர் என்.நடராஜன் நன்றி கூறி னார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றன.
அரசு பெண்கள் பள்ளி 
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் சொ. சுகுணா தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் எஸ். கார்த்திகேயன் வரவேற்றார். பெற்றோர் ஆசிரி யர் கழக துணைத் தலைவர் பால் பக்கர், கே.எஸ்.ராஜேந்திரன், பொருளாளர் எஸ்.எம். நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டமன்ற உறுப்பினரும், பள்ளி பெற்றோர் ஆசி ரியர் கழகத் தலைவருமான மா.கோவிந்தராசு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.  ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சிவ.மதி வாணன், முன்னாள் கயிறு வாரியத் தலைவர் நீலகண்டன், கல்விப் புரவலர் ஆர்.சங்கர், ஆசிரி யர்கள் ஆர்.பழனிச்சாமி, வே.கயல்விழி கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியர் கே.செல்வ ராஜ் நன்றி கூறினார்.  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் கருணாநிதி கொடியேற்றி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக பொருளா ளர் ஆர்.பி.ராஜேந்திரன், துணைத் தலைவர் கள் எம்.சுந்தர்ராஜன், தெட்சிணாமூர்த்தி, கல்விப்புரவலர் கோவி.இளங்கோ, செல்லத் துரை, ஆசிரியர்கள் அடைக்கலமணி, சத்திய நாதன் கலந்து கொண்டனர். முன்னதாக உதவித் தலைமை ஆசிரியர் கே.சோழபாண்டியன் வர வேற்றார். ஆசிரியர் மா.சோலை நன்றி கூறினார்.  காலகம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் ஆர்.ராமநாதன் கொடி யேற்றி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பா.முத்துவேல், ஊராட்சி தலைவர் ஆர்.செந்தில்குமார், துணைத் தலைவர் ஜோதிபாண்டி, ஆசிரியர்கள் எம்.அக்னி, ஜெ. செல்வகுமார், ஆர்.வெற்றிச்செல்வி, ஜி.நட ராஜன் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசி ரியை மாலா வரவேற்றார். ஆசிரியை விஷ்ணு குமாரி நன்றி கூறினார்.  பேராவூரணி அரசு கல்லூரியில் முதல்வர் முனைவர் நா.தனராஜன் கொடியேற்றி வைத் தார். பேராசிரியர்கள் ராணி, பழனிவேல், ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.  பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் மு.மணிமொழியன் கொடி யேற்றி வைத்தார். பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் தவமணி கொடியேற்றி வைத்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சேதுபாவாசத்திரம்
சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய தலைவர் மு.கி.முத்து மாணிக்கம் கொடியேற்றி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் நாடியம் சிவ.மதிவாணன் கலந்து கொண்டனர்.  பேராவூரணி டாக்டர் ஜே.ஸி. குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி விழா நிகழ்ச்சிக்கு அறங்காவ லர் பொறியாளர் அஸ்வின் ஸ்ரீதர் தலைமை வகித்தார். அறங்காவலர்கள் ராமு, ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சுரேஷ் வரவேற்றார். தமிழ்நாடு மெட்ரிக்  பள்ளிகள் சங்க மாநிலத் துணை பொதுச் செய லாளர் முனைவர் ஸ்ரீதர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.  விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, தொலைக்காட்சி தொகுப்பா ளர் சென்னை பாலவேல் சக்ரவர்த்தி பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார். மாணவர்கள் பங்கேற்ற நடனம், யோகா, கராத்தே போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி நிர்வாக இயக்கு நர் எம்.நாகூர்பிச்சை, அறங்காவலர்கள் கண பதி, நபிஷாபேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் அரவிந்தன் நன்றி கூறினார்.
ஏ.வி.சி கல்லூரி
ஏ.வி.சி பொறியியல் கல்லூரியில் நடை பெற்ற விழாவிற்கு ஏ.வி.சி கல்வி நிறுவ னங்களின் தலைவர் மருத்துவர் விஜயரங்கன் தேசியக் கொடி ஏற்றி உரை ஆற்றினார். ஏ.வி.சி கல்வி நிறுவனங்களின் செயலர் கார்த்தி கேயன் பொருளாளர் ஞானசுந்தர், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் ராகவன், மகேஷ் கலந்து கொண்டனர்.  முன்னதாக ஏ.வி.சி பொறியியல் கல்லூரி யின் முதல்வர் சுந்தர்ராஜ் வரவேற்புரை ஆற்றி னார். கல்லூரியின் இயக்குனர் நிர்வாகம் முனை வர் செந்தில்முருகன், டீன் (கல்வி), ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறை இயக்குனர், துறை தலை வர்கள் கலந்து கொண்டனர். கல்லூரியின் துணை முதல்வர் செல்வமுத்துக்குமரன் நன்றி யுரையாற்றினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி 
குடியரசு தின விழாவையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலைய அரிஸ்டோ ரவுண் டானாவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமுஎகச மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் வி. ரங்கராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அரசி யல் சாசனத்தை பாதுகாப்போம். மதச்சார் பின்மையை பாதுகாப்போம் என்ற அரசியல் சாசன முகப்புரையை மாவட்டத் தலைவர் கவி ஞர் நந்தலாலா வாசிக்க, அதனை அனை வரும் திரும்பச் சொல்லி உறுதி மொழி ஏற்றனர். மாவட்டப் பொருளாளர் காளிராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மணிமாறன், ஹரிபாஸ்கர், பூவிழி, சரவணன், ரமேஷ், முரளி, ரவி, கவி கலந்து கொண்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் சங்கம் சார்பில் திருச்சி தெப்பக் குளம் அருகே உள்ள காந்தி சிலைக்கு மாநில துணைத்தலைவர் புஷ்பநாதன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப் பட்டது. மாவட்ட தலைவர் ஜெ.ஜெயபால் தலை மையில் அரசியல் சட்ட பாதுகாப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  மாநகர் மாவட்டச் செயலாளர் ஆ.கோபி நாத், மணிகண்டம் ஒன்றிய செயலாளர் ஆரோக்யராஜ், ஒன்றிய பொருளாளர் தன லெட்சுமி, அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் தர்மராஜ், கிழக்கு பகுதி தலைவர் து.அந்தோணி சேகர், திருவரம்பூர் ஒன்றிய செயலாளர் சித்ரா கலந்து கொண்டனர். புறநகர் மாவட்டத் தலைவர் குமார் நன்றி கூறினார்.
லால்குடி ஒன்றியம்
லால்குடி ஒன்றியம் பெரியவர்சீலியில் வீர மாமுனிவர் நினைவு படிப்பகம் சார்பில் கொடி யேற்று விழாவிற்கு படிப்பக பொறுப்பாளர் ராஜன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற சுபேதார் மேஜர் தேசிய கொடியை ஏற்றி னார். பெரியவர்சீலி பங்குதந்தை சிரில்ராபர்ட், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு துணைத்தலைவர் அப்துல்ரகுமான் சிறப்புரை யாற்றினர். ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் ரொனால்டு, வென்சலாஸ், ஞானபிரகாசம், அடைக்கலசாமி, ஜான்ஜோசப் கலந்து கொண்ட னர். முன்னதாக அமைப்பாளர் வின்சென்ட் வர வேற்றார். ஜீவபாரதி நன்றி கூறினார்.
ஜங்சன் பகுதிக்குழு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜங்சன் பகுதிக்குழு தென்னூர் அண்ணா நகர் கிளை சார்பிலான விழாவிற்கு மாதர் சங்க மாவட்ட தலை வர்கள் வள்ளி, சித்ரா தலைமை வகித்தனர். சிஐடியு ஆட்டோ சங்க மாவட்ட துணை செயலா ளர் வேதநாயகம் தேசிய கொடியை ஏற்றினார். அரசியல் சட்ட பாதுகாப்பு உறுதிமொழியை வாலிபர் சங்க பகுதிக்குழு தலைவர் விஜய் வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், ஜங்சன் பகுதி செயலாளர் ரபீக்அஹமது கலந்து கொண்டனர். அண்ணா நகர் கிளை செயலாளர் முருகன் நன்றி கூறி னார்.
செம்பனார்கோவில்
நாகை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர் அருண் தலைமை வகித்தார். ஒன் றிய தலைவர் நந்தினி ஸ்ரீதர் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். துணை தலைவர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செம்பனார்கோவில் கலைமகள் பள்ளி யில் நடைபெற்ற விழாவிற்கு இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்.எஸ்.குடியரசு தேசிய கொடியினை ஏற்றி வைத்து உரையாற்றினார். தாளாளர் நெடுஞ்செழியன், செயலர் ஜெயப்பிர காசம், பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.  தரங்கம்பாடி பிஷப் ஜான்சன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை யாசிரியர் ஜான் சைமன் தலைமை வகித்தார். தாளாளர் இன்பராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மீனவ பஞ்சாயத்தார்கள், லயன் சங்க நிர்வாகிகள், வணிகர் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
குளித்தலை
மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றிய குழு சார்பில் குளித்தலை காந்தி சிலை மற்றும் வை.புதூர் பகுதிகளில் கொடியேற்று விழா மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் முத்து செல்வன், ஒன்றிய செயலாளர் பிரபாகர் கலந்து கொண்டனர்.
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அன்னை மீனாட்சி நாச்சியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் பள்ளி நிறுவனர் டி.என்.எஸ்.நாகராஜன் தேசிய கொடியை ஏற்றினார். ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன், ராசி மூர்த்தி, ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் பாண்டி துரை, பேராசிரியர் குருமூர்த்தி, தொழிலதிபர். சி என்.சி.சிவா, என்.டி.வி குமரேசன், முன்னாள் கவுன்சிலர் மனோகரன், ஆசிரியர் இளங்கோ கலந்து கொண்டனர். நிறைவாக பள்ளி முதல்வர் யோகா ராஜா நன்றி கூறினார். அறந்தாங்கி காரைக்குடி சாலையில் இயங்கி வரும் அன்னை செவித்திறன் குறைந்தோருக்கான சிறப்பு பள்ளியில் தேசிய கொடியை தலைமை ஆசிரியர் ரா.ராஜீவ் ஏற்றி னார். பள்ளி சிறப்பு ஆசிரியைகள் பு.மோக னப்பிரியா, இ.ஜெனிபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அறந்தாங்கி அகரம் பகுதி கார்னிவல் ஸ்கில் டிரெனிங் இன்ஸ்ட்டியூட் கல்லூரியில் தேசிய கொடியை கல்லூரி பொறுப்பாளர் ரெங்கசாமி ஏற்றினார். கல்லூரி ஆசிரியை நிர்மலா உள்ளிட்டோர் கலந்து கொன்டனர் அறந்தாங்கி ரோட்டரி ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க முன்னாள் மூத்த தலைவர் பத்மநாமன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ரோட்டரி சங்க தலைவர் க. சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் தலைவர்கள் தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணசாமி, சந்திரமோகன், ஆறுமுகம், விஜயா துரைராஜ்,  பீர் சேக், கர்ணன், அபுதாலிபு, வருங்கால தலை வர் ராமன் பரத்வாஜ், உறுப்பினர்கள் செந்தில் குமார், ஆனந்தராஜன், பிஸ்மி முபாரக், பிரபா கரன், செல்ல செந்தமிழ் செல்வன் கலந்து கொண்டனர். செயலாளர் வீரையா நன்றி கூறினார். அறந்தாங்கி செலக்சன் கல்வி நிறு வனத்தில் பள்ளி தாளாளர் கண்ணையன் தேசிய கொடியேற்றி வைத்தார். பள்ளி முதல்வர் சுரேஷ்குமார் வரவேற்றார். முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் நாராயணசாமி, வீராச்சாமி கலந்து கொண்டனர். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

;