tamilnadu

img

பூதலூர் அருகே நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை

தஞ்சாவூர், ஆக.1- தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே உள்ள அலமேலுபுரம் பூண்டி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்க மாவட்ட துணைத் தலை வர் வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார் தலைமையில் விவசாயிகள் ராம தாஸ், திருநாவுக்கரசு, ஜெய்சங்கர், நாராயணன், ராஜேந்திரன் ஆகி யோர் புதன்கிழமை அன்று தஞ்சாவூ ரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் கோரி க்கை மனு அளித்தனர். அம்மனு வில், “அலமேலுபுரம் பூண்டி கிரா மத்தில் பல்வேறு நெருக்கடிக ளுக்கு இடையே மின்மோட்டார் களை பயன்படுத்தி, ஆழ்குழாய் கிணறுகள் மூலம் மிகுந்த சிரமத்து டன் கோடை நெல் சாகுபடி செய் யப்பட்டுள்ளது.  இப்பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக் கப்படாததால், தனியார் வியாபாரி களிடம் மிகக் குறைந்த விலையில் நெல்லை விற்கும் சூழ்நிலை உள் ளது. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்க வேண்டியுள்ளது. அருகிலுள்ள நாகாச்சி, விஷ்ணம் பேட்டை நெல் கொள்முதல் நிலை யங்களுக்கு நெல்லைக் கொண்டு சென்று, விற்க வேண்டுமெனில், வாகன வாடகை, ஏற்றுக்கூலி, இறக்குக் கூலி போன்ற செலவி னங்களை சமாளிக்க வேண்டும். மேலும் உரிய நேரத்திற்கு ஆட்கள் கிடைக்காததால், நெல் மூட்டை களை கொண்டு செல்வதிலும் சிர மம் உள்ளது.  மேலும் அந்தந்த கொள்முதல் நிலையங்களில் உள்ளூர் விவசாயி களின் நெல்லுக்கே முன்னுரிமை கொடுத்து வாங்கப்படுவதால், விவ சாயிகள் கொண்டு செல்லும் நெல்லை விற்பனை செய்வதற்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் அந்த நெல்லை பாதுகாப்பதில் விவ சாயிகளுக்கு பல்வேறு பிரச்சனை களும் உள்ளன. இதுபோன்ற கார ணங்களால் கூடுதல் செலவு ஏற்படு வதை தவிர்க்க முடியாத நிலை உள்ளது. எனவே கடும் சிர மத்திற்கு இடையே நாங்கள் விளை வித்துள்ள நெல்லை விற்பனை செய்வதில் மிகுந்த தாமதம் ஏற்படும் நிலை உள்ளது.  எனவே இப்பகுதி விவசாயி களின் சிரமங்களைப் போக்கும் வித மாக அலமேலுபுரம் பூண்டி கிரா மத்திலேயே நேரடி நெல் கொள் முதல் நிலையம் திறக்க வேண்டும். இது இப்பகுதி விவசாயிகளுக்கு உதவிகரமாக அமையும்” என மனு வில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

;