tamilnadu

மழையினால் தலை சாய்ந்த நெற்பயிர்களை உடனே அறுவடை செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்

தஞ்சாவூர், ஜன.23- மழையினால் தலை சாய்ந்த நெற்பயிர் களை உடனடியாக அறுவடை செய்திடுமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவத்தில், 1 லட்சத்து 35 ஆயிரத்து 187 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள் ளது. அனைத்து வட்டாரங்களிலும் சுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெற் பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.  இந்நிலையில் கடந்த ஜன.18 அன்று பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சில இடங்களில் தலை சாய்ந்த நிலையில் வயலில் கிடக்கிறது. உட னடியாக அறுவடை செய்வதன் மூலம் இத னால் ஏற்படக்கூடிய பாதிப்பை தவிர்த்திட லாம்.  முதிர்ச்சி பருவம் மற்றும் அறுவடை பரு வத்தில் பயிர்கள் இருந்தால், அந்த வயல் களில் தாழ்வான பகுதிகளை இனம் கண்டு, தண்ணீரை உடனடியாக வடித்திட நட வடிக்கை எடுக்க வேண்டும். வயலில் தேங்கும் நீரை ஆழமான வாய்க்கால் அமைத்து வடித்திட வேண்டும். விவசாயி கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள பயிர்களை களிமண் பாங்கான இடங்களில் செயின் மாடல் நெல் அறுவடை இயந்திரம் மூலமும், மணல் சாரி பகுதிகளில் டயர் மாடல் நெல் அறுவடை இயந்திரம் மூல மும் உடனடியாக அறுவடை மேற்கொள்ள வேண்டும்.  அறுவடை செய்த நெல் மணிகளை தற்போதுள்ள வெயிலை பயன்படுத்தி உட னடியாக உலர்த்தி, 17 சதவீதத்திற்கு கீழ் கொண்டு வந்து உடனடியாக கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.  மேலும், தற்போது மாவட்டத்தில் 209 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நாளொன்றுக்கு ஆயிரம் மூட்டைகள் வரை கொள்முதல் செய்ய அனு மதி அளிக்கப்பட்டு இயங்கி வருகின்றன. எனவே விவசாயிகள் அனைவரும் அறு வடை நிலையில் உள்ள காய்ந்த பயிர்களை உடனடியாக அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம்” என தெரிவித்துள்ளார்.

;