தஞ்சாவூர், ஜன.30- தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப் பினர்களின் எண்ணிக்கை 15 ஆகும். நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்த லில் அ.திமு.க.வினர் 7 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான பாஜக 1 இடத்திலும், தி.முக. 6 இடத்திலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்தி லும் வெற்றி பெற்றனர். இந்த நிலையில், ஏற்கனவே, தள்ளி வைக்கப்பட்ட ஒன்றியக் குழு விற்கான மறைமுகத் தலைவர் தேர்தல் வியாழக்கிழமை ஆவ ணத்தில் உள்ள, பேராவூரணி ஒன்றிய அலுவலக கூட்ட மாளிகையில் நடை பெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார்.ஒன்றியக் குழு தலைவர் பதவியைப் பிடிக்க அ.தி.முக. வைச் சேர்ந்த 2 பேர் போட்டியிட்டனர். அதில், திருச்சிற்றம்பலம் (வார்டு எண்: 6) ஒன்றியக் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்த சசிகலா ரவிசங்கர் (வயது 36), 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பேராவூரணி ஒன்றியக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா ரவிசங்கருக்கு பேராவூரணி ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சடையப்பன், தவமணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், அதிமுக மாவட்டச் செயலாளரும் எம்.பி.,யுமான ஆர்.வைத்திலிங்கத்தை சந்தித்து சசிகலா ரவிசங்கர் ஆசி பெற்றார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பி னர் மா.கோவிந்தராசு. முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.வி.திருஞான சம்மந்தம், பேராவூரணி ஒன்றி யக்குழு முன்னாள் தலைவர் விமலா கணேசன், வழக்கறிஞர் சீனிவாசன், பொறியாளர் கோவி.இளங்கோ, பி.ஜே.பி மாவட்டத் தலைவர் பண்ண வயல் இளங்கோ உடன் இருந்தனர்.