tamilnadu

img

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவுதினம்

தஞ்சாவூர், அக்.8- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், பாட்டரசன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 60-ஆவது நினைவு தினத்தையொட்டி மணிக்கூண்டு அருகே உள்ள கவிஞரின் சிலைக்கு செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தமு எகச கிளைத் தலைவர் முருக.சர வணன் தலைமை வகித்தார். செயலா ளர் மோரீஸ் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். பொது மருத்துவர் மு.அகி லன், கவிஞரின் சிலைக்கு மாலை அணி வித்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, தமுஎகச நிர்வாகிகள் கே.கிருஷ்ண மூர்த்தி, தி.தனபால், தாஸ், பசுபதி, கேசவன், பன்னீர், கல்யாணசுந்தரம், தமிழவன், அண்ணாதுரை, பாக்யா பாலா, வெற்றிச்செல்வன், ஆறுமுகம், செந்தில், எஸ்.கே.பாலகிருஷ்ணன், எஸ்.பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக பொரு ளாளர் எல்ஐசி பக்கிரிசாமி நன்றி கூறி னார்.