தஞ்சாவூர், பிப்.26- தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாற்று த்திறனாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு தஞ்சாவூர் மாவட்ட அளவில் மாற்றுத் திற னாளிகளுக்கான தடகள மற்றும் குழு விளை யாட்டுப் போட்டிகள், தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் செவ்வாய்க்கி ழமை நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தலைமையேற்று விளையாட்டுப் போட்டி களை துவக்கி வைத்து பேசினார். இவ்விழா வில் தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் சு.ரவீந்திரன் சிறப்பு ரையாற்றினார். முன்னதாக மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சு.அந்தோணி அதிஷ்டராஜ் வரவேற்றார். மேலும், தஞ்சாவூர் தூய இருதய மழலை யர் மற்றும் துவக்கப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் உத்திராபதி, மதிய உணவு வழங்கிய தஞ்சாவூர் சேவாலயா தொண்டு நிறுவ னத்தின் நிர்வாகிகள், பிஸ்கட் பொட்டலம் மற்றும் தேநீர் வழங்கிய தஞ்சாவூர் அன்னை பிராய்லர்ஸ் உரிமையாளர் ஆர். விஜய்பாண்டியன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வீரர், வீராங்கனைகளுக்கு பல்வேறு உதவிகள் செய்து வாழ்த்தி சிறப்பி த்தனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தஞ்சாவூர் மாவட்டப் பிரிவின் சார்பாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்க ளும் வழங்கப்பட்டன. இப்போட்டியில் வீரர், வீராங்கனைகள் சுமார் 650 பேர் கலந்து கொண்டனர். நிறைவு விழாவில் சிறப்புப் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பா ளர்கள், நடுவர்கள் பணி மேற்கொண்ட உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரி யர்கள் மற்றும் மாவட்ட விளையாட்டு பிரிவின் பயிற்றுநர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவில் மாவட்ட கூடை ப்பந்து பயிற்றுநர் க.சண்முகபிரியன் நன்றி கூறினார்.