tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு மக்கள் ஒற்றுமை காப்போம் உறுதிமொழி ஏற்பு

தஞ்சாவூர், ஜன.26- குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். குடிமக்கள் தேசிய பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவு ஆகிய நடைமுறை களை கைவிட வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, குடியரசு தினத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்து, அரசியல் சாசன விழு மியங்களை உயர்த்தி பிடிப்போம். மக் கள் ஒற்றுமை காப்போம் என உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி, தஞ்சை மாவட் டம் பாபநாசம் ஒன்றியம் சக்கராப் பள்ளி கோவிலடி பேருந்து நிலை யத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் சேக் அலா வுதீன் தலைமையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் ஆர்.மனோகரன் கொடியேற்றி வைத்து உரையாற்றினார். ஒன்றிய செயலாளர் பி.எம்.காதர் உசேன், வி.ச. தங்கராசு, வி.சி.க வெற்றி வேந்தன், தம்பிராசா, சம்சுதீன், ரகுமான், சஃபி, அஜ்மீர் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
பட்டுக்கோட்டை 
சிபிஎம் பட்டுக்கோட்டை சார்பில் அறந்தாங்கி சாலை முக்கத்தில் காந்திசிலைக்கு மாலை அணிவித்து, உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்த சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச் செல்வி முன்னிலை வகித்தார்.  ஜீவானந்தம், வீரப்பன், முருக.சர வணன், எஸ்.பாலகிருஷ்ணன், பாண் டியன், நைனாமுகமது, வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் குட்டி என்ற சு. சுந்தரபாண்டியன், ஒன்றியத் தலைவர் மோரீஸ் அண்ணாதுரை, மெரினா ஆறு முகம், நகர காங்கிரஸ் தலைவர் ஆர்.டி. ரவிக்குமார், மாவட்ட துணைத் தலை வர் வழக்கறிஞர் ராமசாமி, வட்டாரத் தலைவர் அன்பழகன், தாயுமானவன், பழனிவேல், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக்குழு சி.பக் கிரிசாமி, ஒன்றியச் செயலாளர் ஏ.எம்.மார்க்ஸ், ரோஜா ராஜசேகரன், நகரச்செயலாளர் எம்.எம்.சுதாகர், தன சீலி கலந்து கொண்டனர்.  தொடர்ந்து பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.சேகரிடம் குடி யுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். குடிமக்கள் தேசிய பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவு ஆகிய நடைமுறைகளை கை விட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சட்டமன்றத்தில் வலி யுறுத்தக் கோரி மனு அளிக்கப்பட்டது.
 மாற்றுத்திறனாளிகள் சங்கம்
தஞ்சையில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங் கத்தின் சார்பில் அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்தி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பகாத் அகமது தலைமை வகித்தார். தஞ்சை நகரச் செயலாளர் ராஜன், தஞ்சை ஒன்றியச் செயலாளர் சங்கிலி முத்து, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் ஜலீல் முகை தீன், பேராவூரணி ஒன்றியத் தலைவர் வின்சென்ட் ஜெயராஜ், அம்மா பேட்டை ஒன்றியத் தலைவர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாவட்ட செயலாளர் பி.எம். இளங் கோவன் உறுதிமொழி வாசித்தார். மாவட்ட துணைத்தலைவர் கிரிஸ்டி, சிபிஎம் மாநகரச் செயலாளர் என். குருசாமி, சங்கத்தின் நகரத் தலை வர் மோகன், திருவோணம் ஒன்றியப் பொறுப்பாளர் லதா, ஒரத்தநாடு ஒன்றி யப் பொறுப்பாளர் சரவணன், பாப நாசம் ஒன்றியத் தலைவர் சதாசிவம், சிபிஎம் மாநகரக்குழு உறுப்பினர் அப் துல் நசீர் மற்றும் மக்கா மதினா ஈமான் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்பட திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
கோட்டூர்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் இருள்நீக்கி கிராம ஊராட்சி அலுவலகம் முன்பாக நடை பெற்ற குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோட்டூர் ஒன்றிய செயலாளர் என். சண்முகவேல் தலைமை தாங்கினார்.  இருள் நீக்கி ஊராட்சி தலைவர் செங்கொடி குமாரராஜா முன்னிலை வகித்தார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் பேசி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமாரராஜா, மூத்த தோழர் எஸ். தங்கராசு, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் ஜோதிபாசு, கல்யாணசுந்தரம் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்
குடியுரிமைத் திருத்தச் சட்டத் திற்கு எதிராக தேசத்தை காத்திடவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாகை மாவட்டத்தில் 20 க்கு மேற்பட்ட இடங்களில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாகப்பட்டினம் அவுரித்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சி.பி.எம். நாகை நகரப் பொறுப்புச் செயலா ளர் சு.மணி தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரு மான நாகைமாலி சிறப்புரையாற்றி னார். மாவட்டக்குழு உறுப்பினர் ப. சுபாஷ் சந்திரபோஸ் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதியேற்றுக் கொண்டனர். சொ.கிருஷ்ணமூர்த்தி, பி.பாலசுப்பிரமணியன், பி.முனி யாண்டி, ஆர்.ராமமூர்த்தி, கா.காந்தி நேசன், டி.தினேஷ்குமார், எஸ்.ராஜேந் திரன், கே.வெங்கடேஷ், வி.மாரி முத்து, கே.சண்முகநாதன், எம்.செண் பகம், கே.சண்முகநாதன், ஜி.ராஜேஸ் வரி, ஆர்.நாகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;