tamilnadu

img

அக்.11-ல் குடிமனைப் பட்டா, ஓய்வூதியம் கேட்டு முற்றுகை

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் கணபதி நகர் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள்ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சட்டமன்றஉறுப்பினரும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவருமான ஏ.லாசர் கூறியதாவது:

தமிழக அரசின் சிறப்பு பட்டா  வழங்கும் திட்டத்தின் கீழ் குடிமனைப் பட்டா வழங்கிட வேண்டும். தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 11 ஆம் தேதி தமிழகம் முழுவதும்விவசாய தொழிலாளர்கள் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் செய்து முற்றுகைப் போராட்டம் நடத்தவுள்ளனர்.“தமிழக அரசு சிறப்பு பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் 5 லட்சம் பேருக்குபட்டா வழங்குவதாக அறிவித்தது. புறம்போக்கு, நீர்நிலை மேய்ச்சல் புறம்போக்கு, கோயில் நிலங்கள் மற்றும் ஆட்சேபகரமான இடங்களில் குடியிருப்போருக்கு மாற்று இடம் தருவதாகவும், தமிழக அரசின் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருக்க இடம் தருவதாகவும் அறிவித்தனர். ஆனால் அரசின் அறிவிப்புவெற்று அறிவிப்பாகவே உள்ளது. கடந்த திமுக ஆட்சியில் முழுமையாக கணக்கெடுப்பு செய்து மனைப் பட்டா வழங்குவதாக சொன்னார்கள். விவசாயத் தொழிலாளர் சங்கம் நடத்திய போராட்டம் காரணமாக அப்போது வீடுகள் இடிப்பது நிறுத்திவைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியிலும்இதுகுறித்து நாங்கள் சட்டமன்றத்தில் குரல் எழுப்பினோம். ஆனால் அரசின்செயல்பாடுகள் வெறும் கண் துடைப்பாகவே உள்ளது. தமிழக அரசு அனைத்து இடங்களிலும் கணக்கெடுப்பு நடத்தி ஓராண்டு காலத்திற்குள் இடம் வழங்கவேண்டும். பொது மக்களை பலவந்தமாக மாவட்ட நிர்வாகம் வெளியேற்றுவதைக் கைவிட வேண்டும். ஆனால் மக்களை ஏமாற்றும் விதமாகவே அரசின்நடவடிக்கைகள் உள்ளன. 

முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ரூ.500 லிருந்துரூ. 1000 ஆக உயர்த்தப்பட்ட போது, 38 லட்சம் பேருக்கு  வழங்கப்பட்டது. அதுஓராண்டு காலத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டது. அதன் பின்னர் தகுதி இல்லை என காரணம் காட்டி சுமார் 20 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. தற்போது 15 லட்சம் முதல் 18 லட்சம்பேருக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. எதற்காக குறைத்தார்கள் என அரசு தெளிவுபடுத்த வேண்டும். கடந்த ஆறு ஆண்டுகளாக மனுகொடுத்து காத்திருக்கும் முதியவர்களுக்கு இதுவரை ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. தகுதியற்றவர்களுக்கு பல இடங்களில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தகுதியுள்ளவர்கள் ஓய்வூதியம் வராமல் அலைக்கழிக்கப்படுகிறார்கள். எனவே  இதனைமுறைப்படுத்தி தகுதியுள்ள அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சட்டக்கூலி வழங்காதவர்கள் பஞ்சப்படி வழங்குவார்களாம்
நூறு நாள் வேலைத் திட்டத்தில் 22 கோடி மனித நாட்கள் பணி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால் இதில் ரூ. 4,000 கோடியை கட்டுமானப் பணிகளுக்கு என ஒதுக்கியுள்ளது. இதனால் மனித உழைப்புக்கு இல்லாமல் இதர வேலைகளுக்கு நிதிஒதுக்கப்படுவது தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இதில் 10 சதவீதம் மட்டுமே கட்டுமானப் பணிகளுக்கு ஒதுக்கவேண்டும். 90 சதவீதம் நிதி மனித உழைப்புக்கே வழங்கப்பட வேண்டும். நூறுநாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு பஞ்சப்படி வழங்கப்படும் என்கின்றனர். தமிழகத்தில் சட்டக்கூலியே வழங்காதவர்கள், பஞ்சப்படி வழங்குவேன் என்பது ஏமாற்று வேலையாகத்தான் இருக்கிறது. 

டெல்டா மாவட்டங்களில் கடைமடைகளுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை. தூர்வாரும் பணி உரியகாலத்தில் முறையாக நடைபெறாததால் கடைமடைக்கு தண்ணீர் செல்லாமல் உள்ளது. ஏரி, குளங்கள் நிரம்பாமல்உள்ளன. தூர்வாரும் பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி முறையாக பயன்படுத்தப்பட்டதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றாமல் வெற்று அறிவிப்புகளை மட்டுமே செய்து வருகிறது. நெல் கொள்முதல் நிலையங்கள்செப்டம்பர் 15-ல் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மழையில் நெல் மூட்டைகள் வீணாகின்றன. நெல்கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உடனடியாக அறிவிக் கவேண்டும். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் டெல்டாவில் பாசனப் பகுதி நவீனப்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால்பணிகள் முறையாக நடைபெறவில்லை. அதனை உடனடியாக விரைவுபடுத்தி முடிக்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு லட்சம் வீடு கட்டித் தருவதாக அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை அதற்கான பணி நடைபெறவில்லை. இப்பணியை அரசு விரைவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 11-ல் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு மனுக் கொடுத்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு ஏ.லாசர் கூறினார். அப்போது மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், மாநில நிர்வாகிகள் பி.வசந்தாமணி, எம்.சின்னதுரை, கே.பக்கிரிசாமி, அ.பழனிசாமி, மாவட்ட நிர்வாகி கே.அபிமன்னன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;