சென்னை:
தமிழ்நாடு தையல் தொழிலாளர் நலவாரியத்திலிருந்து கடந்த பத்து மாதங்களாக வழங்கப்படாத ஓய்வூதிய நிலுவை தொகை உடனடியாக வழங்க வலியுறுத்தி செவ்வாயன்று (ஜுலை 21) மாநிலம் தழுவியஆர்ப்பாட்டத்தை நலவாரிய அலுவலகங்கள் முன்பும் குடியிருப்பு பகுதிகளிலும் நடத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சம்மேளனம் (சிஐடியு) மாநில தலைவர் பி.சுந்தரம், பொதுச் செயலாளர் எம்.ஐடாஹெலன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கோரிக்கைகளை வலியுறுத்தி 21.7.2020 அன்று தமிழ்நாடு தையல்கலைஞர்கள் சம்மேளனம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் தையல் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளிலும், நலவாரிய அலுவலகம், மக்கள் கூடும் இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த சம்மேளனத்தின் மாநிலக்குழு அறைகூவல் விடுக்கிறது.
கோரிக்கைகள்
தமிழ்நாடு தையல் தொழிலாளர் நலவாரியத்திலிருந்து கடந்த பத்து மாதங்களாக வழங்கப்படாத ஓய்வூதிய நிலுவை தொகை உடனடியாக வழங்க வேண்டும், நலவாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களில் கொரோனாகாலத்தில் 60 வயது பூர்த்திசெய்த தொழிலாளர்களை கணக்கிட்டுஒய்வூதியம் வழங்க வேண்டும். நலவாரி யத்தில் பதிவு செய்த அனைவருக்கும் கொரோனா ஊரடங்கு காலநிவாரண நிதி வழங்க வேண்டும். தையல் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.நலவாரியத்தில் புதிதாக ஏற்படுத்தியுள்ள ஆன்லைன் பதிவை எளிமைப் படுத்த வேண்டும். முறையாக தொழிலாளர்துறையில் தணிக்கை கணக்கு சமர்ப்பிக்கப் பட்டு பதிவிலுள்ள தொழிற்சங்கங்களுக்கு மட்டுமே ஆன்லைன் பதிவுக்கு அனுமதிக்கவேண்டும்.
கூட்டுறவு தையல் உறுப்பினர்களுக்கு ஊதியத்தை வருடா வருடம் 5 சதவிகிதம் உயர்த்தி வழங்க ஏற்கனவே தமிழகஅரசு பிறப்பித்த அரசாணையை நடை முறைபடுத்த வேண்டும். அரசாணைப்படி கூட்டுறவு தையல் உறுப்பினர்களுக்கு நிலுவைத் தொகையும் கணக்கீடு செய்து வழங்கிட வேண்டும். கோட் தைப்பதற்கான நியாயமான கூலியை நிர்ணயம் செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.இதில் தையல் கலைஞர்கள் பங்கேற்று ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.