tamilnadu

img

போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் ஊதிய ஒப்பந்த கோரிக்கை விளக்க வாயிற்கூட்டம்

தஞ்சாவூர், செப்.4- தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சங்கம் சிஐ டியு தஞ்சை நகரக் கிளை சார்பில், ஊதிய ஒப்பந்த கோரிக்கை விளக்க வாயிற் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு தஞ்சை நகர பணிமனை முன்பாக நடைபெற்றது.  கூட்டத்திற்கு கிளைத் தலைவர் எல்.தினகரன் தலைமை வகித்தார். மத்திய சங்கதுணைச் செயலாளர் எஸ்.ராமசாமி வரவேற்றார். கிளைச் செயலாளர் கே. சந்திரசேகரன், கிளை நிர் வாகிகள் எஸ்.மணிகண்டன், பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட் டச் செயலாளர் சி.ஜெயபால், கௌரவத் தலைவர் ஆர்.மனோகரன், மத்திய சங்கத் தலைவர் பி.முருகன், சம் மேளனத் துணைத் தலை வர் எம்.கண்ணன், பொதுச் செயலாளர் ஜி.மணிமாறன், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.செங்குட்டுவன், மத்திய சங்க துணைத் தலைவர் என்.கண்ணன், திருநாவுக்கரசு, கே.தாமோதரன், ஆர்.வெங்கடாஜலபதி, துணைச் செயலாளர் டி.காரல் மார்க்ஸ், எஸ்.ராஜ்குமார், உள்ளிட் டோர் கண்டன உரையாற்றி னர். நிறைவாக கிளை பொரு ளாளர் ஏ.சதீஷ்ராஜ் நன்றி கூறினார்.  தஞ்சை நகர் பணி மனை கிளை மேலாளரின் தொழிலாளர் விரோதப் போக்கை கூட்டம் கண்டித் தது. 14 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவக்க வேண்டும். எரி பொருள் சிக்கனம் என்ற பெய ரில் ஓட்டுனர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, விபத்துக்கு வழிவகுக்கும் போக்கை கைவிட வேண் டும். தொழில்நுட்பப் பணியா ளர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கிட வேண்டும். டாடா பேருந்து களை பராமரிக்க கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். தொழிலாளர் களுக்கு விடுப்பு வழங்க மறுப்பது, ஓ.டி பார்க்க வற் புறுத்துவதை கைவிட வேண் டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகள் கூட் டத்தில் வலியுறுத்தப்பட்டன.  இரவு 10 மணிக்கு தொடங்கிய வாயிற்கூட்டம் அதிகாலை 2 மணிக்கு நிறை வடைந்தது. தியாகி என்.வி.கலைக்குழு, உரந்தை போர்முரசு குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றன.

;