tamilnadu

கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக அதிகாரிகள் ஒப்புதல் சிபிஎம் நூதனப் போராட்டம் ஒத்திவைப்பு

தஞ்சாவூர், ஆக.18- பூதலூரில் வட்டாட்சியர் தலைமை யில் நடைபெற்ற சமாதானப் பேச்சு வார்த்தையில், கோரிக்கைகளை நிறை வேற்றித் தருவதாக அதிகாரிகள் உறுதி  அளித்ததால், திங்கட்கிழமை நடைபெற விருந்த நூதனப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.  தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர்  வட்டம் செங்கிப்பட்டி சரகம், இராய முண்டான்பட்டி - சொரக்குடிப்பட்டி இணைப்பு சாலையை, சீர் செய்யா ததைக் கண்டித்தும், ஒப்பந்தம் விட ப்பட்டு நீண்ட நாட்கள் ஆன வடுகன்பு துப்பட்டி- வையாபுரிப்பட்டி சாலையை உடனடியாக அமைத்து தரக்கோரியும், வெண்டையம்பட்டி சாலையில் இருந்து  வடுகன் புதுப்பட்டிக்கு செல்லும்  ஆற்றுச் சாலையை (உய்யக்கொ ண்டான் கரை ரோடு) உடனடியாக தார்ச் சாலையாக புதுப்பித்துக் தரக் கோ ரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆக.17(திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு இராயமுண்டான்பட்டியில் நூதன போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் அன்று மாலை  பூதலூர் வட்டாட்சியர் அலுவல கத்தில், வட்டாட்சியர் சிவகுமார் தலை மையில் சமாதான பேச்சுவார்த்தை நடை பெற்றது. இக்கூட்டத்தில், இராயமு ண்டான்பட்டி - சொரக்குடிப்பட்டி இணை ப்பு சாலை ஒரு மாத காலத்திற்குள் சீரமைத்து தரப்படும். வடுகன் புதுப்பட்டி - வையாபுரிப்பட்டி சாலை ஒரு வார காலத்தில் பணி துவக்கப்படும். வெண்டயம்பட்டி சாலையில் இருந்து,  வடுகன்புதுப்பட்டிக்கு செல்லும் ஆற்றுச் சாலையை (உய்யக்கொண்டான் கரை  ரோடு) உடன் தார் சாலையாக மாற்ற  பொதுப்பணித்துறையிடம் கலந்தா லோசித்து ஒரு வார காலத்திற்குள் தகவல் அளிக்கப்படும்” என உறுதிய ளிக்கப்பட்டதையடுத்து நூதன போரா ட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்க ப்பட்டது.

;