தஞ்சாவூர், ஆக.22-- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் புரட்சித் தலைவி அம்மா பேரவை உறுப்பினர் சேர்க்கை முகாம் தனிமனித இடைவெளியைப் பின்பற்றி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், தஞ்சை தெற்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.சேகர் தலைமை வகித்து பேசி னார். தொடர்ந்து பொறுப்பா ளர்களிடம் உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழ ங்கினார். அம்மா பேரவை ஒன்றியச் செயலாளர்கள் ஞான பண்டிதன் (பேராவூரணி), அம்மணிசத்திரம் பாலு (சேதுபாவாசத்திரம்) ஆகி யோர் முன்னிலை வகித்த னர். சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.வி.திரு ஞான சம்பந்தம், அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் நாடியம் சிவ.மதிவாணன் (சேதுபாவாசத்திரம் வடக்கு), அருணாசலம் (சேதுபாவாசத்திரம் தெற்கு) மற்றும் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.