tamilnadu

தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

தஞ்சை விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை 
தஞ்சாவூர், செப்.30- தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டு ராபி பரு வத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெல் சம்பா பயிருக்கு 1,42,846 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்தனர்.  நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தினரால், தஞ்சா வூர் மாவட்டத்திற்கு 2018 ரபி பருவ நெல் சம்பா பயிருக்கு 1,40,352 விவசாயிகளுக்கு ரூ. 269.59 கோடி பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை மற்றும் பட்டி யல்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டு, இழப்பீட்டு தொகை உரிய விவசாயிகளின் வங்கி கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும்” இவ்வாறு ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

நாளை கிராம சபைக் கூட்டம் 
தஞ்சாவூர், செப்.30- தஞ்சாவூர் மாவட்டத்தில் 589 கிராம ஊராட்சிகளிலும் அக். 2 புதன்கிழமை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடை பெறும் கிராம சபைக் கூட்டத்தில், பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணா துரை கேட்டுக் கொண்டுள்ளார்.  இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், ஊரகப் பகுதி களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப் பட்ட நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தொடர்பாக விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. எனவே இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் மேலான ஆலோசனைகளை வழங்கி, கிராம வளர்ச்சிக்கு உதவிட வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி 
தஞ்சாவூர், செப்.30- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் சமுதாய வளை காப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா. கோவிந்தராசு தலைமை வகித்து பேசினார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தரராஜன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் பேராவூரணி செல்வம், சடை யப்பன், சேதுபாவாசத்திரம் கிருஷ்ணமூர்த்தி, கோவிந்த ராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இந்நிகழ்ச்சியில், சுமார் 320 கர்ப்பிணி பெண்களுக்கு பரிசுப்பொருட்களும், சட்டமன்ற உறுப்பினர் மா. கோவிந்தராசு சார்பில் புடவையும், நாடியம் சிவ மதிவாணன் சார்பில் தலா ரூ 100 ரொக்கப்பரிசும் தனியாக வழங்கப் பட்டது.

;