tamilnadu

img

எல்ஐசி புதிய திட்டங்கள் அறிமுக விழா

தஞ்சாவூர், மார்ச் 2- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி எல்ஐசி துணைக் கிளை அலுவலகத்தில் புதிய பாலிசி திட்டங்களின் அறிமுக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. கிளை மேலாளர் பா.சுரேஷ் தலைமை வகித்து புதிய பாலிசி திட்டத்தை அறி முகம் செய்தார். உதவி நிர்வாக அலு வலர் ந.யசோதா, முன்னணி எல்ஐசி முக வர்கள் கே.கே.கந்தசாமி, கே.நீல கண்டன், பி.மஞ்சுளா, பெத்தபெரு மாள், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  லிகாய் முகவர் சங்க செயலாளர் ஆத.சுப.நீலகண்டன், லியாபி முகவர் சங்கத் தலைவர் ஆர்.பெருமாள், முக வர்கள் சீராளன், மாணிக்கம், முண் டைய்யன், வசந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.  இதே போல் தஞ்சாவூர் எல்ஐசி கோட்ட அலுவலகத்தில் பங்குசந்தை சார்ந்த இரண்டு புதிய பாலிசிகள் அறிமுக விழா நடைபெற்றது. கோட்ட வணிக மேலாளர் கே.ராம்குமார் வர வேற்றார். முதுநிலைக் கோட்ட மேலாளர் கே.வெங்கட்ராமன் புதிய பாலிசி களை அறிமுகம் செய்தார். விற்பனை மேலாளர் ஆர்.நேரு நன்றி தெரி வித்தார். நிவேஷ் ப்ளஸ் என்ற புதிய திட்டத்தில் ஒரே தவணையில் பிரமீயம் செலுத்துவது. இத்திட்டத்தில் குறைந்த பட்ச பிரிமீயமாக ரூ.1 லட்சம் உள்ளது. மற்றொரு திட்டமான சிப்பி (எஸ்ஐஐபி) இந்த திட்டத்தில் மாதம், மூன்று மாதம், ஆறு மாதம், ஓராண்டு என்ற தவணைக ளில் பிரமீயத்தை செலுத்தலாம்.குறைந்தபட்ச ஆண்டு பிரீமியம் ரூ.40 ஆயிரமாகும். இந்த இரண்டு திட்டங்களும் 90 நாள் குழந்தை முதல் 65 வயதுடையவர்க ளுக்கு பாலிசி எடுக்கலாம். பாலிசி முதிர்வின்போது அன்றைய யூனிட்டு களின் பண்டு மதிப்புத்தொகை சில விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்படும். பாலிசி துவங்கிய 5 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பகுதியை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.